Tag Archives: ஓகைப்பேரையூர்
அருள்மிகு ஜகதீஸ்வரர் திருக்கோயில், ஓகைப்பேரையூர்
அருள்மிகு ஜகதீஸ்வரர் திருக்கோயில், ஓகைப்பேரையூர், (திருப்பேரையூர்) நீடாமங்கலம் தாலுகா, திருவாரூர் மாவட்டம்.
+91- 4367 – 237 692 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ஜகதீஸ்வரர் | |
அம்மன் | – | ஜகன் நாயகி (பெண்ணமிர்த நாயகி) | |
தல விருட்சம் | – | நாரத்தை மரம் | |
தீர்த்தம் | – | அக்னி தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருப்பேரெயில், ஓகைப்பேரெயில் | |
ஊர் | – | ஓகைப்பேரையூர் | |
மாவட்டம் | – | திருவாரூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | அப்பர் |
சோழ நாட்டின் தலைநகராகத் திருவாரூர் விளங்கியபோது, அதைச்சார்ந்த கோட்டை இருந்தது என்றும், அக்கோட்டையின் அருகே எழுந்த ஊர் “பேரெயிலூர்” என்று பெயர் பெற்றதென்றும் அப்பெயரே மருவி “பேரையூர்” என்றாயிற்று என்பது ஆய்வாளர் கருத்து.
இவ்வூரில் தோன்றிய பெண் புலவர், பேரெயில் முறுவலார் பாடிய பாடல்கள் குறுந்தொகையிலும், புறநானூற்றிலும் உள்ளன.
இத்தலத்தில் உள்ள சபாபதி (நடராஜர்) பிற தலங்களை விட மிக அழகாக விளங்குவதாக தல வரலாறு கூறுகிறது.
இத்தல முருகப்பெருமானுக்கு சித்திரை சஷ்டியில் திருவிழா நடக்கிறது. திருநாவுக்கரசர் அருளிய திருக்குறுந்தொகை திருப்பதிகம் ஒன்றைப்பெற்ற தலம்.