Tag Archives: தீர்த்தத்தொட்டி

அருள்மிகு விருப்பாச்சி ஆறுமுக நயினார் திருக்கோயில், தீர்த்தத்தொட்டி

அருள்மிகு விருப்பாச்சி ஆறுமுக நயினார் திருக்கோயில், தீர்த்தத்தொட்டி, கோடாங்கிபட்டி, தேனி மாவட்டம்.

+91- 93641 19656 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 1 மணி வரை மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

விருப்பாச்சி ஆறுமுக நயினார்

உற்சவர்

சுப்பிரமணியர்

தலவிருட்சம்

வில்வம்

தீர்த்தம்

முருக தீர்த்தம் (தீர்த்த தொட்டி)

ஆகமம்

சிவாகமம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

புராணப்பெயர்

கோடாங்கிபட்டி

ஊர்

தீர்த்த தொட்டி

மாவட்டம்

தேனி

மாநிலம்

தமிழ்நாடு

அசுரன் ஒருவனை அழிக்கச் சென்ற சப்தகன்னியர், தவறுதலாக ஒரு மகரிஷியை அழித்து விட்டனர். இந்த தோஷம் நீங்க, இத்தலத்தில் தீர்த்தம் உருவாக்கி முருகனை வழிபட்டனர். அவர்களுக்கு காட்சி தந்த முருகன், தோஷத்தைப் போக்கியருளினார். பிற்காலத்தில் இங்கு தீர்த்தம் மட்டும் இருந்தது.

பல்லாண்டுகளுக்கு பின்பு இப்பகுதியில் வசித்த பக்தர் ஒருவர் பழநிக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பினார். வழியில் விருப்பாச்சி என்ற இடத்தில், கலவரம் உண்டானது. இதனால் அவரால் ஊர் திரும்பமுடியவில்லை. வீடு திரும்பும் வரையில், வழியில் தங்கக்கூடாது என நினைத்தவர், முருகனிடம் தனக்கு வழி காட்டும்படி வேண்டினார். அப்போது அங்கு பாலகன் ஒருவன் அவரிடம், ஒரு முனை மழுங்கிய வேலைக் கொடுத்து, “இதை கையில் பிடித்துக்கொண்டு செல்லுங்கள். வழி கிடைக்கும்என்றான். அவரும் வேலை வாங்கிக்கொண்டு ஊர் திரும்பினார். வழியில் இங்கிருந்த தீர்த்தத்தொட்டியில் நீராடியவர், தீர்த்தக் கரையில் வேலை வைத்துவிட்டுச் சென்றார். பின்பு பக்தர்கள் இந்த வேலையே, முருகனாக பாவித்து வழிபட்டு வந்தனர். முருகன் சன்னதி எதிரில், இந்த வேல் இருக்கிறது. இதன் முனை, கூர்மையின்றி உடைந்த நிலையிலேயே தற்போதும் இருக்கிறது.