Tag Archives: கிராமம்

சிவலோகநாதர் திருக்கோயில், கிராமம் (திருமுண்டீச்சரம்)

அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில், கிராமம் (திருமுண்டீச்சரம்), உளுந்தூர்பேட்டை வட்டம், விழுப்புரம் மாவட்டம்.

+91- 4146-206 700

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சிவலோக நாதர், முண்டீச்சுரர், முடீசுவரர்
அம்மன் சவுந்தர்யநாயகி, கானார்குழலி, செல்வாம்பிகை
தல விருட்சம் வன்னிமரம்
தீர்த்தம் பிரம்ம தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் முண்டீச்சரம், திருக்கண்டீச்சரம்
ஊர் கிராமம்
மாவட்டம் விழுப்புரம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருநாவுக்கரசர்

சிவனின் வாயில்காவலர்களான திண்டி, முண்டி இத்தலத்தில் வழிபாடு செய்துள்ளனர். முண்டி வழிபட்டதால் இத்தலம் முண்டீச்சரம்எனப்பட்டது. “முடீச்சரம்என்பதே இத்தலத்தின் புராணப்பெயராக இருந்துள்ளது. இதுவே காலப்போக்கில் திருமுண்டீச்சரம்ஆனது என்பர்.

துவாபர யுகத்தில் சொக்கலிங்கம் என்ற மன்னன் வேட்டைக்கு வந்த போது இப்பகுதில் இருந்த குளத்தில் அதிசயமான தாமரை மலரைக்கண்டான். தன் சேவகர்களை அனுப்பி அந்த மலரை பறித்துவரக் கட்டளையிட்டான். அவர்களால் அந்த மலரைப் பறிக்க முடியவில்லை. மலர் குளத்தை சுற்றிவர ஆரம்பித்தது. எனவே மன்னனே நேரில் சென்று அந்த மலர் மீது அம்புவிட, குளம் முழுவதும் செந்நிறமாக மாறியது. இதைக்கண்ட மன்னன் மயங்கி விழுந்தான். அந்த மலரின் நடுவில் இலிங்கம் இருப்பதைக்கண்டு, குளத்தின் கரையிலேயே கோயில் கட்டி இலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தான். இலிங்கத்தின் மீது மன்னன் விட்ட அம்பின் அடையாளம் இன்றும் உள்ளது. இதனால் இறைவன் முடீஸ்வரர்எனப்படுகிறார். இப்பெயரே கல்வெட்டில் மவுலி கிராமம்என அழைக்கப்படுகிறது. மவுலி என்றால் முடிஅல்லது கிரீடம் என்று பொருள். காலப்போக்கில் மக்கள் மவுலியை விட்டு கிராமம் என அழைக்கத்தொடங்கினார்கள்.