Tag Archives: மொரட்டாண்டி
அருள்மிகு சனீஸ்வரன் திருக்கோயில், மொரட்டாண்டி
அருள்மிகு சனீஸ்வரன் திருக்கோயில், மொரட்டாண்டி, விழுப்புரம் மாவட்டம்
பிரமாண்டமான தோற்றத்தில் காட்சி தரும் சனீஸ்வரனை மொரட்டாண்டி என்னும் திருத்தலத்தில் தரிசிக்கலாம். இருபத்தேழு அடி உயரத்தில் பஞ்சலோகத்தில் உருவான இவரது காலடியில் 12 ராசிக்களுக்கான சின்னங்கள் இருப்பதை காணலாம். மேற்கு திசை நோக்கி அருள் புரியும் சனீஸ்வரனை சுற்றி மற்ற கிரகங்கள் எல்லாம் பதினாறடி உயரத்தில் வாகனத்துடன், அவரவர்க்கு உரிய திசையில் காட்சி தருகிறார்கள்.
இத்திருத்தலத்திற்குள் நுழைந்ததும் முதலில் நம்மைவரவேற்பவர், ஐம்பத்து நான்கடி உயர மகா கணபதி. இவரை கிரக சாந்தி கணபதி என்கிறார்கள். இவரது முதுகில் “நாளைவா” என்ற வாசகம் எழுதப்பட்டிருப்பதை காணலாம். இவரது பீடத்தின் கீழ் நல்லெண்ணெய் அபிஷேகம் செய்கிறார்கள். இதனால் கிரக சாந்தி ஏற்படும் என்று நம்பப்படுகிறது.
அறுபது வருடங்களை குறிக்கும் மரங்கள் இருபத்தேழு நட்சத்திர மரங்கள், பன்னிரண்டு இராசிகளுக்கான மரங்கள், நவகிரகங்களுக்கான மரங்கள் என்று, நூற்றியெட்டு மரங்கள் இத்தலத்தினைச் சுற்றி அழகுடன் காட்சி தருகின்றன.
வாஸ்து பகவான் இடது கையை தலையில் சாய்த்து படுத்தவண்ணம் நீண்ட உருவத்தில் காட்சி தருகிறார். இயற்கை சீற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு சனி மற்றும் சூரியனிலிருந்து ஏற்படும் புற ஊதா கதிகர்கள்தான் காரணம் என்று விஞ்ஞான ரீதியாக சொல்லப்படுகிறது. இந்த புறா ஊதா கதிர்கள் சனீஸ்வரனின் அம்சம் என்று ஜோதிட ரீதியாக கூறப்படுகிண்றது. இந்த கதிர்களின் தாக்கதிலிருந்து உலக மக்களை காப்பாற்றவே, இங்கு பஞ்சலோக சனீஸ்வரன் சிலை முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்படுகிறதாம்.
இத்தலத்திற்கு ஒரு முறை வந்து, இங்குள்ள தெய்வங்களை தரிசிக்க வாழ்வில் வசந்தம் வீசும். சனியின் தாக்கம் குறையும். வாஸ்து தோஷம், திருமண தடைகள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி பொங்கும் என்கிறார்கள். புதுவையிலிருந்து திண்டிவனம் செல்லும் பேருந்தில் பயணித்தால் பதினைந்து நிமிடத்தில் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், மொரட்டாண்டி என்னும் ஊரிலுள்ள இத்தலத்திற்கு செல்லலாம்.
அருள்மிகு பிரத்யங்கிராதேவி திருக்கோயில், மொரட்டாண்டி
அருள்மிகு பிரத்யங்கிராதேவி திருக்கோயில், மொரட்டாண்டி – 605 111 புதுச்சேரி மாவட்டம்.
**************************************************************
+91-413-320 4288 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பிரத்யங்கிராதேவி(அபராஜிதா) |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் |
ஊர் | – | மொரட்டாண்டி |
மாவட்டம் | – | புதுச்சேரி |
மாநிலம் | – | புதுச்சேரி |
இராமரையும், இலட்சுமணனையும் தன் படைபலத்தால் போரிட்டு வெற்றி பெற முடியாது என்பதை அறிந்தான் ராவணனின் மகன் இந்திரஜித். எனவே நிரும்பலை என்ற இடத்தில் தேய்பிறை அஷ்டமி தினத்தில் நடுநிசியில் மிக ரகசியமாக மகா பிரத்யங்கிரா யாகம் நடத்தி, இராம, இலட்சுமண ர்களை அழித்து விடலாம் என நினைத்தான்.
இந்தத் தகவலை, இந்திரஜித்தின் சித்தப்பா, விபீடணனின் உதவியால் ஆஞ்சநேயர் அறிந்தார். இந்திரஜித் இந்த யாகத்தைப் பூர்த்தி செய்துவிட்டால், அவனை வெல்ல யாராலும் முடியாது என அறிந்து, முதலில் யாகத்தையும், பின் இந்திரஜித்தையும் அழித்தார்.
இந்த யாகம் செய்த இடத்தில் தான் பிரத்யங்கிரா தேவிக்குத் தற்போது கோயில் கட்டப்பட்டுள்ளது.