Tag Archives: வாடிப்பட்டி
அருள்மிகு அய்யனார் திருக்கோயில், வாடிப்பட்டி
அருள்மிகு அய்யனார் திருக்கோயில், வாடிப்பட்டி, மதுரை மாவட்டம்.
காலை 6-8 மணி, மாலை 4-7 மணி வரை திறந்திருக்கும்.
சாஸ்தாவின் அவதாரம் என்று கூறப்படும் அய்யனார், வாடிப்பட்டியில் அருள் செய்கிறார். இவர் முதலில் காட்சி தந்தது கவுசிக வம்சத்தை சேர்ந்த பிருத்யும்ய ராஜாவுக்குத்தான்.
ஒருமுறை இவர் வேட்டைக்கு சென்றபோது தாகத்திற்கு நீர் கிடைக்கவில்லை. “ஊனான்” எனப்படும் கொடியை வெட்டினால் தண்ணீர் கிடைக்கும் என்பதால் அதை வெட்டினார். பலமுறை முயற்சித்தும் கொடி அறுபடவில்லை. கொடி எங்கிருந்து முளைத்து வருகிறது என அறிவதற்காக அதைத் தொடர்ந்து சென்றபோது, ஒரு இலிங்கத்தின் அடிப்புறத்தில் இருந்து வெளிவந்தது தெரியவந்தது. கொடியைப் பலம் கொண்டமட்டும் இழுக்க, கொடி வேரோடு வெளி வந்தது. வேரில் பாதுகை (செருப்பு) செண்டி மற்றும் பிரம்பு இருந்தது. ராஜா திகைத்தார். அப்போது ஜடா முடியுடன் அய்யனார், ராஜா முன் காட்சி அளித்தார்.