Tag Archives: தஞ்சாக்கூர்
பரஞ்சோதி ஈசுவரர் உடனுறை ஞானாம்பிகை திருக்கோயில், தஞ்சாக்கூர்
அருள்மிகு பரஞ்சோதி ஈசுவரர் உடனுறை ஞானாம்பிகை திருக்கோயில், தஞ்சாக்கூர், சிவகங்கை மாவட்டம்.
+91- 4574-205 100
காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பரஞ்சோதி ஈசுவரர் | |
அம்மன் | – | ஞானாம்பிகை | |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | ஆதிவில்வ வனம் | |
ஊர் | – | தஞ்சாக்கூர் | |
மாவட்டம் | – | சிவகங்கை | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
ஒரு முறை கைலாயத்தில் பிரம்மா, விஷ்ணு மற்றும் இந்திரன் முதலிய தேவர்கள் சிவனிடம் சென்று,”இறைவா. நாள் தோறும் நாங்கள் தங்களை பூசித்து வருகிறோம். இருந்தாலும் தங்களது எதார்த்த வடிவமாகிய பரஞ்சோதி தரிசனத்தை எங்களுக்கு காட்டியருள வேண்டும்” என வேண்டினர். அதற்கு இறைவன்,”பூமியில் வில்வ வனத்தில் நான் அரூபமாக உள்ளேன். நீங்கள் அங்கு சென்று பூசித்தால் பரஞ்சோதி தரிசனம் கிடைக்கும்” என்றார். அதன்படி அவர்கள் வில்வவனத்தை கண்டுபிடித்து, அங்கிருந்த வில்வமரத்தடியில் ஓர் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து, அதற்கு பூஜை செய்ய குளமும் உண்டாக்கி சிவ பூஜை செய்தனர்.
சிவன் இவர்களது பூஜையை சோதனை செய்ய விரும்பி முதலில் ஒரு தேவ கன்னியையும், அதன் பின் மகாகாளி, வீரகாளியையும், கடைசியாகத் தானே வயதானவர் வேடத்தில் தோன்றி பூஜைக்கு இடையூறு செய்தார். இதையெல்லாம் தேவர்கள் கண்டு கொள்ளாமல் பூஜையை தொடர்ந்தனர்.