Category Archives: நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் மாவட்டம் – ஆலயங்கள்
நாகப்பட்டினம் மாவட்டம் – ஆலயங்கள் |
|
அருள்மிகு |
ஊர் |
அகத்தீஸ்வரர் | அகஸ்தியன் பள்ளி |
முக்கண் நாற்கை ஆஞ்சநேயசுவாமி மற்றும் இராஜகோபாலசுவாமி | அனந்தமங்கலம் |
சுந்தரேஸ்வரர் | அன்னப்பன்பேட்டை (திருக்கலிக்காமூர்) |
தான்தோன்றீஸ்வரர் | ஆக்கூர் |
சிவலோகத்தியாகர் | ஆச்சாள்புரம் |
பஞ்சவடீஸ்வரர் | ஆனந்த தாண்டவபுரம் |
இரட்டக்குடி |
|
நீலகண்டேஸ்வரர் | இலுப்பைபட்டு |
எட்டுக்குடி |
|
காத்ர சுந்தரேஸ்வரர் | கஞ்சாநகரம் |
காளியூர் |
|
வீரட்டேஸ்வரர் | கீழப்பரசலூர் |
கடைமுடிநாதர் | கீழையூர் |
நாகநாதசுவாமி | கீழ்ப்பெரும்பள்ளம் |
கேடிலியப்பர் | கீழ்வேளூர் |
உத்தவேதீஸ்வரர் | குத்தாலம் |
கண்ணாயிரமுடையார் | குறுமாணக்குடி (திருக்கண்ணார் கோவில்) |
சாஸ்தா (கைவிடேயப்பர்) | கைவிளாஞ்சேரி |
வீரட்டேஸ்வரர் | கொருக்கை |
கோடிக்குழகர் | கோடியக்காடு |
உமாமகேஸ்வரர் | கோனேரிராஜபுரம் |
கிருபாகூபாரேச்வரர் | கோமல் |
சாயாவனேஸ்வரர் | சாயாவனம் |
நவநீதேஸ்வரர் | சிக்கல் |
அயவந்தீஸ்வரர் | சீயாத்தமங்கை |
சட்டநாதர், பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர் | சீர்காழி |
திரிவிக்கிரமன் | சீர்காழி |
விஸ்வநாதர் | சீர்காழி |
ஆதிகும்பேஸ்வரர் | செண்பகபுரம் |
சுவர்ணபுரீஸ்வரர் | செம்பொனார்கோவில் |
பேரருளாளன் | செம்பொன்செய் கோயில் |
கோழிக்குத்தி வான முட்டிப்பெருமாள் | சோழன் பேட்டை |
பைரவர் | தகட்டூர் |
நாண்மதியப்பெருமாள் | தலச்சங்காடு |
சங்காரண்யேஸ்வரர் | தலைச்சங்காடு |
குற்றம் பொறுத்த நாதர் | தலைஞாயிறு |
பரிமள ரங்கநாதர் | திரு இந்தளூர் |
அபிராமி கோயில் | திருக்கடையூர் |
அமிர்தகடேஸ்வரர் | திருக்கடையூர் |
லோகநாதப்பெருமாள் | திருக்கண்ணங்குடி |
சவுரிராஜப்பெருமாள் | திருக்கண்ணபுரம் |
ஆரண்யேஸ்வரர் | திருக்காட்டுப்பள்ளி |
கோபாலகிருஷ்ணன் | திருக்காவளம்பாடி |
குந்தளேஸ்வரர் | திருக்குரக்கா |
வெள்ளடைநாதர் | திருக்குருகாவூர் |
நரசிம்மர் | திருக்குறையலூர் |
பிரம்மபுரீஸ்வரர் | திருக்குவளை |
சப்தபுரீஸ்வரர் | திருக்கோலக்கா |
செங்கண்மால் | திருத்தெற்றியம்பலம் |
தெய்வநாயகர் | திருத்தேவனார் தொகை |
வேதராஜன் | திருநகரி |
நாகநாதசுவாமி | திருநாகேசுவரம் |
மாதங்கீஸ்வரர் | திருநாங்கூர் |
குடமாடு கூத்தன் | திருநாங்கூர் (அரிமேய விண்ணகரம்) |
மகாலட்சுமீஸ்வரர் | திருநின்றியூர் |
திருப்பயற்றுநாதர் | திருப்பயத்தங்குடி |
சிவலோகநாதர் | திருப்புன்கூர் |
உத்வாகநாதர் | திருமணஞ்சேரி |
வரதராஜப்பெருமாள் | திருமணிக்கூடம் |
பத்ரிநாராயணர் | திருமணிமாடக் கோயில் |
பிரம்மபுரீஸ்வரர் | திருமயானம் |
இரத்தினகிரீஸ்வரர் | திருமருகல் |
முல்லைவன நாதர் | திருமுல்லைவாசல் |
புருஷோத்தமர் | திருவண்
புருசோத்தமம் |
வாய்மூர்நாதர் | திருவாய்மூர் |
அழகியசிங்கர் | திருவாலி |
மாணிக்கவண்ணர் | திருவாளப்புத்தூர் |
கோமுக்தீஸ்வரர் | திருவாவடுதுறை |
உச்சிரவனேஸ்வரர் | திருவிளநகர் |
சுவேதாரண்யேஸ்வரர் | திருவெண்காடு |
அண்ணன் பெருமாள் | திருவெள்ளக்குளம் |
கல்யாண சுந்தரேஸ்வரர் | திருவேள்விக்குடி |
வைகல்நாதர் | திருவைகல் |
சொர்ணபுரீஸ்வரர் | தெற்கு பொய்கைநல்லூர் |
தேவாதிராஜன் | தேரழுந்தூர் |
வேதபுரீஸ்வரர் | தேரழுந்தூர் |
அக்னீஸ்வரர் | நல்லாடை |
காயாரோகணேஸ்வரர் | நாகப்பட்டினம் |
சவுந்தரராஜப்பெருமாள் | நாகப்பட்டினம் |
நாகப்பட்டினம் |
|
வீரபத்திரசுவாமி | நாகப்பட்டினம் |
சோமநாதர் | நீடூர் |
தாமரையாள் கேள்வன் | பார்த்தன் பள்ளி |
நற்றுறணையப்பர் | புஞ்சை |
பல்லவனேஸ்வரர் | பூம்புகார் |
பெரம்பூர் | |
வாகீஸ்வரர் | பெருஞ்சேரி |
ஆபத்சகாயேஸ்வரர் | பொன்னூர் |
திருமேனியழகர் | மகேந்திரப் பள்ளி |
மாயூரநாதர் | மயிலாடுதுறை |
வதாரண்யேஸ்வரர் (வள்ளலார் கோயில்) | மயிலாடுதுறை |
ஐராவதேஸ்வரர் | மேலத்திருமணஞ்சேரி |
வலம்புரநாதர் | மேலப்பெரும்பள்ளம் |
மனத்துணைநாதர் | வலிவலம் |
வீரட்டேஸ்வரர் | வழுவூர் |
வீரபத்திரசுவாமி (வழிக்கரையான்) | வழுவூர் |
காளீஸ்வரர் | வில்லியநல்லூர் |
திருமறைக்காடர் | வேதாரண்யம் |
வைகுண்டநாதர் | வைகுண்ட விண்ணகரம் |
வைத்தியநாதர் | வைத்தீசுவரன்கோயில் |
அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில், திருக்குறையலூர்
அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில், திருக்குறையலூர், நாகப்பட்டினம் மாவட்டம்.
+91- 94435 64650, 94430 07412
(மாற்றங்களுக்குட்பட்டதுவை)
காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
நரசிம்மர் |
தாயார் |
– |
|
அமிர்தவல்லி |
பழமை |
– |
|
1000 வருடங்களுக்கு முன் |
ஊர் |
– |
|
திருக்குறையலூர், சீர்காழி |
மாவட்டம் |
– |
|
நாகப்பட்டினம் |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
சிவனை அவமரியாதை செய்யும் வகையில், பார்வதியின் தந்தை தட்சன் ஒரு யாகம் நடத்தினான். இதனால் கோபம் கொண்ட பார்வதி, தந்தைக்கு புத்தி புகட்ட யாகம் நடக்கு மிடத்திற்குச் சென்றாள். அவளையும் தட்சன் அவமரியாதை செய்யவே, யாகத்தீயில் விழுந்து விட்டாள். கோப மடைந்த சிவன், தனது அம்சமாக வீரபத்திரரை உருவாக்கி அனுப்பி யாகத்தை அழித்தார். மேலும், பார்வதியைப் பிரிந்த துயரம் சிவனை வாட்டியது. நரசிம்மர் அவருக்கு இத்தலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகக் காட்சி தந்து அமைதிப்படுத்தியதாக தல புராணம் கூறுகிறது. நரசிம்மரை இவ்வாறு இரண்டு தாயார்களுடன் தரிசிப்பது மிகவும் அரிது.
திருமங்கை ஆழ்வார் அவதரித்த தலம் இது. இக்கோயிலில் இவருக்கு சன்னதி உள்ளது. துவாபர யுகத்தில் உபரிசிரவஸு என்ற மன்னனாகப் பிறந்த இவர், இங்கு நரசிம்மரை வழிபட்டு, அடுத்த பிறப்பில் நீலன் என்னும் மன்னனாக இங்கு அவதரித்ததாக மங்களபுரி மகாத்மியம் கூறுகிறது. திருமங்கையாழ்வார், 108 திவ்ய தேசங்களில் 86 தலங்களை மங்களாசாசனம் செய்துள்ளார். இதன் அடிப்படையில் அவர் அவதரித்த இத்தலத்து நரசிம்மரை வழிபட்டால் 86 பெருமாளையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்கிறார்கள். இத்தலத்தில் அவதரித்திருந்தாலும், திருமங்கையாழ்வார் இங்கு சுவாமியை மங்களாசாசனம் செய்ய வில்லை. வேறு தலத்தை மங்களாசாசனம் செய்யும் போது, இத்தல நரசிம்மரைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.