Tag Archives: கபிஸ்தலம்
அருள்மிகு கஜேந்திர வரதன் திருக்கோயில், கபிஸ்தலம்
அருள்மிகு கஜேந்திர வரதன் திருக்கோயில், கபிஸ்தலம்– 614203, தஞ்சாவூர் மாவட்டம்.
+91- 4374 – 223 434 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | கஜேந்திர வரதர் (ஆதிமூலப்பெருமாள், கண்ணன்) |
உற்சவர் | – | செண்பகவல்லி |
தாயார் | – | ரமாமணி வல்லி, பொற்றாமரையாள் |
தல விருட்சம் | – | மகிழம்பூ |
தீர்த்தம் | – | கஜேந்திர புஷ்கரிணி, கபில தீர்த்தம் |
ஆகமம் | – | வைகானசம் |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
ஊர் | – | கபிஸ்தலம் |
மாவட்டம் | – | தஞ்சாவூர் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
இந்திராஜும்னன் எனும் மன்னன் மிகச்சிறந்த விஷ்ணு பக்தனாக இருந்தான். சதா சர்வகாலமும் விஷ்ணு சிந்தனையிலேயே இருப்பான். விஷ்ணுவை கும்பிடாமல் எந்த ஒரு செயலையும் செய்யமாட்டான். ஒரு நாள் அவன் இவ்வுலகத்தையே மறந்த நிலையில் விஷ்ணு பூஜை செய்து கொண்டிருந்தான். இது போன்ற நேரங்களில் யாரும் அவனை காண வருவதுமில்லை. இவனும் யாரையும் காண்பதுமில்லை.
இப்படி அவன் பூஜை செய்து கொண்டிருந்த வேளையில் துர்வாச முனிவர் அவனைக்காண வந்தார். இவர் வந்து வெகு நேரம் ஆனது. ஆனாலும் மன்னன் தன் பூசையறையை விட்டு வெளியே வரவில்லை. பொறுத்துப் பொறுத்து பார்த்த துர்வாசர், மன்னன் இருந்த அறைக்குள் சென்று அவன் முன்னால் நின்றார். அப்போதும்கூட துர்வாசர் வந்திருப்பதை அறியாமல் மன்னன் ஆழ்ந்த பக்தியில் மூழ்கியிருந்தான்.