Tag Archives: திருவாரூர்ப் பரவையுள் மண்டளி
அருள்மிகு தூவாய் நாதர் திருக்கோயில், திருவாரூர்ப் பரவையுள் மண்டளி, தூவாநாயனார் கோயில்
அருள்மிகு தூவாய் நாதர் திருக்கோயில், திருவாரூர் கீழவீதி, திருவாரூர்ப் பரவையுள் மண்டளி, தூவாநாயனார் கோயில், திருவாரூர் மாவட்டம் .
+91- 4366 – 240 646, 99425 40479 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | தூவாய் நாதர் | |
உற்சவர் | – | சத்தியவாகீஸ்வரர் | |
அம்மன் | – | பஞ்சின் மென்னடியாள் | |
தல விருட்சம் | – | பலாமரம் | |
தீர்த்தம் | – | ஆகாச தீர்த்தம் | |
ஆகமம் | – | காமியம் | |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருஆருர்ப்பரவையுள் மண்டளி, ஆருர்ப்பரவையுண்மண்டளி | |
ஊர் | – | தூவாநாயனார் கோயில் | |
மாவட்டம் | – | திருவாரூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | சுந்தரர் |
பிரளய காலத்தில் கடல் பொங்கி எழுந்த போது, உலகை காப்பாற்ற தேவர்களும், முனிவர்களும் சிவனிடம் முறையிட்டனர். சிவபெருமான், துர்வாச முனிவரிடம்,”இத்தலத்தின் அக்னி மூலையில் குளம் அமைத்து சிவனை வழிபட்டால் கடல் அமைதியடையும். உயிர்கள் காப்பாற்றப்படும்” என்றார். அதன்படி, துர்வாசர் தலைமையில் முனிவர்கள் இங்கு ஒன்றுகூடிக் குளம் அமைத்து, இறைவனைப் பூஜைசெய்தனர். முனிவர்களின் பூஜையை ஏற்ற சிவன், பொங்கிவந்த கடலை, அக்னி மூலையில் அமைத்த குளத்தின் மூலம் ஈர்த்து கொண்டார். துர்வாச முனிவர் பூஜித்த காரணத்தினால் இத்தல இறைவனுக்கு “துர்வாச நாயினார்” என்ற பெயரும் உண்டு.
இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். கோயிலின் அக்னி மூலையில் குளம் அமைந்திருப்பது தனி சிறப்பாகும். ஒரு காலத்தில் இக்கோயில் கடலினுள் மண்கோயிலாக இருந்துள்ளது என தல வரலாறு கூறுகிறது. ஒரு முறை சுந்தரமூர்த்தி நாயனார் தனது இரண்டாவது துணைவியான சங்கிலி நாச்சியாரிடம்,”நான் எப்போதும் உன்னை விட்டு பிரியமாட்டேன்” என்று உறுதி மொழி கொடுத்தார். திடீரென அவருக்கு முதல் துணைவியான பரவை நாச்சியார் நினைவுக்கு வந்தவுடன் திருவாரூர் புறப்படுகிறார். பரவை நாச்சியாருக்கு செய்து கொடுத்த உறுதி மொழியை மீறியதால் சுந்தரரின் பார்வை பறிபோனது. மனம் கலங்கிய சுந்தரர் பார்வை வேண்டி ஒவ்வொரு சிவத்தலங்களாக சென்று, மீண்டும் பார்வை தந்தருளும்படி வேண்டினார். காஞ்சிபுரம் வந்தபோது, காமாட்சியின் கருணையால் ஏகாம்பரேஸ்வரர், சுந்தரருக்கு இடது கண் பார்வை மட்டும் தந்தருளினார்.