Tag Archives: மேட்டுப்பாளயம்
அருள்மிகு நாட்ராயர்-நாச்சிமுத்து சுவாமி கோயில், மேட்டுப்பாளயம்
அருள்மிகு நாட்ராயர்–நாச்சிமுத்து சுவாமி கோயில், மேட்டுப்பாளயம், திருப்பூர் மாவட்டம்.
இங்கே திருடர் திருந்துவர்; ஆடும் பேய் அலறி ஓடும்! நான் யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் பஸ்மமாக வேண்டும்!’ என்று
சிவபெருமானிடம் வரம் பெற்ற பஸ்மாசுரன், வரத்தைப் பரிசோதிக்க சிவபெருமானின் தலையிலேயே கை வைக்க முயன்ற கதை. அசுரனிடம் இருந்து தப்பிக்க நினைத்து பூலோகம் வந்த ஈசன், பல்வேறு இடங்களில் ஓடி ஒளிந்தார். கடைசியாக அந்த உசிலை வனத்தை அடைந்தவர், ஐவரளிச் செடி ஒன்றின் பழத்துக்குள் பதுங்கினார். இதையறிந்து இங்கு வந்த அசுரன் ஆட்டுக்குட்டியாக மாறி, ஐவரளிச் செடிகளில் இருந்த பழங்களை எல்லாம் தின்னத் துவங்கினான். விஷயம் அறிந்து பதைபதைத்த பராசக்தி, சிவபிரானைக் காப்பாற்றும்படி மகாவிஷ்ணுவிடம்
வேண்டினாள்.