Tag Archives: கணபதீச்சரம்
அருள்மிகு உத்திராபசுபதீஸ்வரர்(கணபதீஸ்வரர்) திருக்கோயில், கணபதீச்சரம், திருச்செங்காட்டங்குடி
அருள்மிகு உத்திராபசுபதீஸ்வரர்(கணபதீஸ்வரர்) திருக்கோயில், கணபதீச்சரம், திருச்செங்காட்டங்குடி, திருப்புகலூர், திருவாரூர் மாவட்டம்.
+91- 4366 – 270 278, 292 300, +91-94431 13025
(மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6.45 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | கணபதீஸ்வரர் | |
உற்சவர் | – | உத்திராபசுபதீஸ்வரர் | |
அம்மன் | – | வாய்த்த திருகுகுழல் உமைநாயகி (சூளிகாம்பாள்) | |
தல விருட்சம் | – | காட்டாத்தி | |
தீர்த்தம் | – | சூர்ய, சந்திர புஷ்கரணி | |
ஆகமம் | – | காமீகம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | கணபதீச்சரம் | |
ஊர் | – | திருச்செங்காட்டங்குடி | |
மாவட்டம் | – | திருவாரூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | சம்பந்தர், அப்பர் |
யானை முகம் கொண்ட கஜமுகாசுரன் என்னும் அசுரனை, விநாயகர் சம்ஹாரம் செய்தார். இதனால் அவருக்கு தோஷம் உண்டானது. தோஷம் நீங்க இத்தலம் வந்தார். சுயம்புவாக எழுந்தருளியிருந்த சிவனை வழிபட்டார். சிவன் அவருக்கு காட்சி தந்து தோஷம் நீக்கியருளினார். எனவே சிவன், “கணபதீஸ்வரர்” என்று பெயர் பெற்றார்.
மூலவர் கணபதீஸ்வரருக்கு வலப்புறத்தில் தனி விமானத்துடன் கூடிய சன்னதியில் உத்திராபசுபதீஸ்வரர் இருக்கிறார். இவரே இத்தலத்தின் பிரசித்தி பெற்ற மூர்த்தியாவார். இவரது பெயரிலேயே தலமும் அழைக்கப்படுகிறது. கைகளில் உடுக்கை, திருவோடு, திரிசூலத்துடன் இவர் காட்சி தருகிறார்.