Tag Archives: தாழம்பூர்
அருள்மிகு திரிசக்தி அம்மன் திருக்கோயில், தாழம்பூர்
அருள்மிகு திரிசக்தி அம்மன் திருக்கோயில் (கேளம்பாக்கம் அருகில்), பழைய மகாபலிபுரம் ரோடு, தாழம்பூர்-603 103, காஞ்சிபுரம் மாவட்டம்.
+91 93810 1919 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | திரிசக்தி அம்மன் |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன்பு |
ஊர் | – | தாழம்பூர் |
மாவட்டம் | – | காஞ்சிபுரம் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
ஒரு பக்தரின் கனவில் அன்னை தோன்றி உத்தர விட்டதால் உருவான கோயில் இது. கொட்டிவாக்கத்தில் ஓர் அழகிய ஆலயமெழுப்பும் எண்ணம் ஐயப்பன் பக்தர்களான சிலர் மனதில் மலர்ந்தது. அந்தக் கோயிலில் மூகாம்பிகை, சுவாலாம்பிகை, கன்னியாகுமரி அம்மன் ஆகிய மூன்று தேவியரையும் அமர்த்தி வழிபட விரும்பினார்கள். காலம் பல கடந்தது. அந்த பக்தர்களுள் ஒருவரின் கனவில், பட்டாடை உடுத்திய மூன்று சிறுமிகளும், கூடவே மூன்று நாகங்களும், சிம்மமும் அடிக்கடி தோன்றின. அந்த பக்தர் கனவுக்கான காரணம் தெரியாமல் திகைத்தார். தனக்கு அடிக்கடி வரும் இந்தக் கனவு குறித்து தனது குருசாமியிடம் கூறினார்.
“மூன்று குழந்தைகள் எனில், சரசுவதி, இலட்சுமி, பார்வதி ஆகிய மூன்று சக்திகள். அவர்கள் உன் கனவில் தோன்ற ஏதேனும் காரணம் இருக்கும். நீ ஏதேனும் பிரார்த்தனை செய்து கொண்டு நிறைவேற்றாமல் இருக்கிறாயா?” என்று கேட்டார் குருசுவாமி.
“பிரார்த்தனை என்று ஏதுமில்லை. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பு மூன்று தேவியருக்கும் சேர்த்து ஒரு கோயில் கட்டும் திட்டம் இருந்தது” என்று பக்தர் பதிலளித்தார். உடனே அதை நிறைவேற்றும்படி கூறினார் குருசுவாமி. குருவின் வழிகாட்டுதலோடு ஆலயமெழுப்பிய பக்தர், ஞான சரசுவதி, மூகாம்பிகை, இலட்சுமி ஆகியோரை பிரதிட்டை செய்து கும்பாபிசேகம் நடத்தினார்.