Tag Archives: வீரமாங்குடி
வஜ்ரகண்டேஸ்வரர் திருக்கோயில், வீரமாங்குடி
அருள்மிகு வஜ்ரகண்டேஸ்வரர் திருக்கோயில், வீரமாங்குடி, திருவையாறு, தஞ்சாவூர் மாவட்டம்.
+91 94435 86453
காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | வஜ்ரகண்டேஸ்வரர் | |
அம்மன் | – | மங்களாம்பிகை | |
தல விருட்சம் | – | வில்வம் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | வீரமாங்குடி | |
மாவட்டம் | – | தஞ்சாவூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
“சாதாரண மனிதனால் மட்டுமே அழிவு உண்டாகும்” என்று வரம் பெற்றிருந்த வஜ்ரன் என்ற அசுரன், தேவர்களைத் துன்புறுத்தினான். தேவர்கள் அவனுடன் சண்டையிட்டும் வெற்றி பெற முடியவில்லை. தேவர்கள், அவனிடமிருந்து தங்களைக் காக்கும்படி, சிவனிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், சிவனடியார் ஒருவரை அசுரனிடம் அனுப்பினார். அவர் அசுரனுடன் போர் வீரன் போல சண்டையிட்டு அழித்தார். இறக்கும் நேரத்தில் தன் தவறை உணர்ந்த அசுரன், சிவனிடம் மன்னிப்பு வேண்டினான். அவனுக்கு அருள்புரிந்த சிவன், அவனது வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார். அசுரனின் பெயரால் “வஜ்ரகண்டேஸ்வரர்” என்றும் பெயர் பெற்றார். வீரனாக வந்த அடியாரால் அசுரன் அழிந்ததால் தலத்திற்கு “வீரமாங்குடி” என்ற பெயர் ஏற்பட்டது. இக்கோயிலுக்கென கோபுரம் கிடையாது. இங்குள்ள அம்பிகை, கன்னிப் பெண்களுக்கு நல்ல வாழ்க்கையையும், திருமணமான பெண்களுக்கு சுமங்கலி பாக்கியத்தையும் தருபவளாக இருக்கிறாள். எனவே, இவளுக்கு “மங்களாம்பிகை” என்று பெயர் சூட்டியுள்ளனர். புதுமணத் தம்பதியர் தங்கள் வாழ்க்கை குறையின்றி இருக்க, இந்த அம்பிகைக்கு புடவை, மஞ்சள் கயிறு அணிவித்தும், மஞ்சள் கிழங்கு, மஞ்சள் பொடிகளை சன்னதியில் வைத்தும் வழிபடுகின்றனர். இதனால், அவர்களது வாழ்வு மங்களகரமாக இருக்கும் என்பது நம்பிக்கை.