Tag Archives: பெரியகளந்தை
அருள்மிகு ஆதீஸ்வரர் திருக்கோயில், பெரியகளந்தை
அருள்மிகு ஆதீஸ்வரர் திருக்கோயில், பெரியகளந்தை, கோயம்புத்தூர் மாவட்டம்.
+91-4259 – 283 503
காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ஆதீஸ்வரர் (ஆதிசேஸ்வரன், ஆதி புரீஸ்வரர் ) |
உற்சவர் | – | சந்திரசேகர் |
அம்மன் | – | பெரியநாயகி |
தல விருட்சம் | – | சந்தனம் |
தீர்த்தம் | – | பிரம்மதீர்த்தம் |
ஆகமம் | – | காமிகம் |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | குழந்தை நகர் |
ஊர் | – | பெரியகளந்தை |
மாவட்டம் | – | கோயம்புத்தூர் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
அருணகிரியார் – திருப்புகழ்
படைப்புத்தொழிலை செய்வதால், தான்தான் அனைத்திலும் சிறந்தவன் என அகங்காரம் கொண்டிருந்த, பிரம்மன் தனது சாபம் நீங்கப் பல இடங்களிலும் சிவனை வணங்கி வந்தார். அவர், சந்தனமரங்கள் நிறைந்த இப்பகுதிக்கு வந்தபோது, சுயம்புவடிவில் சிவன் இருந்ததைக் கண்டு அவரை வணங்கி சாபம் நீங்கப்பெற்றார். பிற்காலத்தில், இவ்விடத்தில் கரிகாற்சோழமன்னர் கோயில் எழுப்பினார்.