Tag Archives: திருமருகல்

அருள்மிகு இரத்தினகிரீசுவரர் திருக்கோயில், திருமருகல்

அருள்மிகு இரத்தினகிரீசுவரர் திருக்கோயில், திருமருகல், நாகப்பட்டினம் மாவட்டம்.

+91 4366 270 823 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் இரத்தினகிரீசுவரர், மாணிக்கவண்ணர்
அம்மன் வண்டுவார்குழலி
தல விருட்சம் வாழை(மருகல்)
தீர்த்தம் லட்சுமி () மாணிக்க தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் மருகல், திருமருகல்
ஊர் திருமருகல்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

இறைவனின் திருநாமம் மாணிக்க வண்ணர்என்பது. சுவாமி சுயம்பு மூர்த்தி. சுயம்பு மூர்த்தி என்பது உளி பாயாது ஆகிய உரு என்பதாம். மாணிக்கவண்ணரது பாணத்தை நோக்கின் உண்மை புலப்படும். சிவலிங்கத்தின் பீடங்கள் சதுரமானவை. அதிலும் சிறப்பாக சுவாமி தோள்பக்கத்தில் பாணத்தின் அடிப்பாகத்தில் ஒரு வெட்டு காணப்பெறும். அது குசசேது மகாராஜா என்பர் இங்கு வந்தபோது இத்தலம் காடாக இருந்ததாம். காடு வெட்டித் திருத்தும்போது மண்வெட்டி திருவுருவில் தாக்கியதாகவும், இரத்தம் பெருகியதாகவும், அரசனறிந்து சுற்றிலும் வெட்டிப்பார்த்து இறையுருவைக் கண்டு, ஏங்கித் தெளிந்து, ஆலயம் எடுப்பித்தான் என்றும் வரலாறு கேட்கப் பெறுகின்றது.

இறைவன் திருநாமம் வடமொழியில் இரத்தினகிரீசுவரர் என்று வழங்குகிறது. சிவலிங்கத்திருவுருவில் கவர்ச்சியானவைகளில் இதுவும் ஒன்று. இங்கு தலவிருட்சம் வாழை. கோயிலின் உட்பிரகாரத்தில் வடக்கு மதில் ஓரமாக தல விருட்சம் இருக்கிறது.