Tag Archives: விக்கிரமசிங்கபுரம்
சிவந்தியப்பர் திருக்கோயில், விக்கிரமசிங்கபுரம்
அருள்மிகு சிவந்தியப்பர் திருக்கோயில், விக்கிரமசிங்கபுரம், திருநெல்வேலி மாவட்டம்.
+91- 4634 – 223 457
காலை 6 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்
மூலவர் | – | சிவந்தியப்பர் | |
அம்மன் | – | வழியடிமைகொண்டநாயகி | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | வாணதீர்த்தம் (பாணதீர்த்தம்) | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | விக்கிரமசிங்கபுரம் | |
மாவட்டம் | – | திருநெல்வேலி | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சிவந்தியப்பர் என்ற சிற்றரசர் இப்பகுதியை ஆட்சி செய்தார். சிவபக்தரான அரசர், தன் நிர்வாகம் திறம்பட இருக்கவும், மக்களின் வாழ்க்கை சிறக்கவும் தன் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் சிவனுக்கு கோயில் கட்ட வேண்டுமென விரும்பினார். இவ்விடத்தில் சிவலிங்கம் நிறுவி, கோயில் எழுப்பினார். சிவனுக்கு மன்னன் பெயரான “சிவந்தியப்பர்” என்ற பெயர் சூட்டப்பட்டது. இங்கு அருளும் சிவந்தியப்பர், அரசர் போல இருந்து மக்களைக் காத்தருளுகிறார். எனவே, அரசருக்குச்செய்யும் மரியாதை போல, சிவலிங்கத்தின் மீது தலைப்பாகை சூட்டி அலங்கரிக்கின்றனர். அம்பாள் வழியடிமை கொண்ட நாயகி தனியே தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். நடராஜர் தனிச்சன்னதியில் இருக்கிறார்.
பொதுவாக தெட்சிணாமூர்த்தி இடது கையில் ஏடு அல்லது அக்னியை ஏந்தியபடிதான் காட்சி தருவார். இத்தலத்தில் இவர் தன் இடக்கையை, காலுக்கு கீழ் இருக்கும் நாகத்தின் தலை மீது வைத்தபடி இருப்பது வித்தியாசமான அமைப்பாகும். நாகதோஷம் உள்ளவர்கள், இவரிடம் வேண்டிக்கொண்டால் தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.