Category Archives: வீரபத்திரர்
அருள்மிகு வீரபத்ரசுவாமி திருக்கோயில், விபூதிப்புரம்
அருள்மிகு வீரபத்ரசுவாமி திருக்கோயில், விபூதிப்புரம், பெங்களூரு மாவட்டம், கர்நாடக மாநிலம்.
+91- 80- 2523 7234 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | வீரபத்திரர் | |
அம்மன் | – | காளிகாம்பாள் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | விபூதிப்புரம் | |
மாவட்டம் | – | பெங்களூர் | |
மாநிலம் | – | கர்நாடகா |
இப்பகுதியை வீரபல்லாளன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். சிவபக்தனான இவனுக்கு, சிவனை அவரது அம்சமான வீரபத்திரர் வடிவில் தரிசிக்க வேண்டுமென ஆசை எழுந்தது. தன் விருப்பத்தை நிறைவேற்றும்படி சிவனிடம் வேண்டி தியானத்தில் ஆழ்ந்தான். அவனது பக்தியை மெச்சிய சிவன், அவனது மனதில் பிரசன்னமாகி வீரபத்திரராக காட்சி தந்தார். மகிழ்ந்த மன்னன், தான் கண்ட வடிவில், வீரபத்திரருக்கு சிலை வடித்தான். அச்சிலையை இங்கு பிரதிஷ்டை செய்து கோயில் கட்டினான். விபூதிப்புரம் வீரசிம்மாசன சமஸ்தான மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
வடக்கு நோக்கிய கோயில் இது. சிவனே வீரபத்திரராக மன்னனுக்கு காட்சி தந்ததால் அவருக்கு, சிவனுக்குரிய புலித்தோல் நிற ஆடையை அணிவித்து அலங்கரிக்கிறார்கள். சிவனைப் போலவே இவரது தலையில் வலப்பக்கம் சூரியனும், இடது பக்கம் சந்திரனும், நெற்றியில் அக்னியும் இருக்கின்றனர். சிவனுக்குரிய ஆயுதங்களான சூலம் மற்றும் உடுக்கையும் இருக்கிறது. இடது கையில் தட்சனின் தலையை வைத்திருக்கிறார். பாதத்திற்கு அருகில் தட்சனும், அவனது மனைவி பிரசுத்தாதேவியும் வணங்கியபடி இருக்கின்றனர். வீரபத்திரருக்கு பின்புறம், ஒரு பீடத்தில் சிவலிங்கம் இருக்கிறது. சன்னதிக்கு வெளியில் இருந்து பார்க்கும்போது, வீரபத்திரரின் தலைக்கு மேலே லிங்கம் இருக்கும்படி உள்ளதான அமைப்பு காண்போரை வியக்க வைக்கிறது. சிவலிங்கத்துடன் காட்சி தருவதால் இவரை, “இலிங்க வீரபத்திரர்” என்றும் அழைக்கிறார்கள். சன்னதி எதிரில் நந்தி இருக்கிறது. உற்சவர் வீரபத்திரரும் நந்தி வாகனத்துடன் இருக்கிறார்.
அருள்மிகு வீரபத்திரசுவாமி (வழிக்கரையான்) திருக்கோயில், வழுவூர்
அருள்மிகு வீரபத்திரசுவாமி (வழிக்கரையான்) திருக்கோயில், வழுவூர், நாகப்பட்டினம் மாவட்டம்.
+91- 4364 – 253 227 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 5.30 மணி முதல் 6.30 மணி. செவ்வாய், வெள்ளியில் காலை 7- மாலை 6 மணி
மூலவர் | – | வீரபத்திரர் (வழிக்கரையான்) | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | வழுவூர் | |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
தாருகாவனத்தில் வசித்த ரிஷிகள், தங்களது யாகத்தால் கிடைக்கும் அவிர்பாகத்தால்தான் தேவர்களே வாழ்கின்றனர் என்று கர்வம் கொண்டனர். அவர்களது ஆணவத்தை அடக்க எண்ணிய சிவன், கையில் பிச்சைப்பாத்திரத்துடன் பிட்சாடனாராக அங்கு வந்தார். திருமால், மோகினி வேடத்தில் அவருடன் சேர்ந்து கொண்டார். மோகினி வடிவிலிருந்த திருமாலைக் கண்ட ரிஷிகள், அவளது அழகில் மயங்கி, தாங்கள் செய்த யாகத்தை விட்டுவிட்டு அவரைப் பின்தொடர்ந்தனர். பிட்சாடனார் வடிவிலிருந்த மிக அழகிய சிவனைக் கண்ட ரிஷிபத்தினிகள், தங்களது நிலை மறந்து அவர் பின் சென்றனர். பின்னர், தங்கள் நிலை உணர்ந்த ரிஷிகள், வந்திருப்பவர்கள் இறைவன் என அறியாமல், சிவன் மீது அக்னி, புலி, மான், மழு, நாகம் என பல ஆயுதங்களை எய்து போரிட்டனர். சிவன் அவற்றையெல்லாம் அடக்கி, தனது ஆபரணங்களாக்கிக் கொண்டார். முனிவர்கள் ஒரு யானையை அனுப்பினர். அதன் தோலைக் கிழித்த சிவன், கஜசம்ஹார மூர்த்தியாக காட்சி தந்தார். ரிஷிகளின் ஆணவம் அடங்கியது. பின்பு அவர்கள் உண்மையை உணர்ந்து சிவனைச் சரணடைந்தனர். சிவன் அவர்களை மன்னித்தருளினார். மோகினி வடிவில் இருந்த திருமாலுக்கும், சிவனுக்கும் சாஸ்தா பிறந்தார். அவரது பாதுகாப்பிற்காக சிவன், தனது அம்சமான வீரபத்திரரை காவலுக்கு வைத்துவிட்டுச் சென்றார். இந்த வீரபத்திரரே இத்தலத்தில் காட்சி தருகிறார். பால சாஸ்தாவும் இங்கிருக்கிறார்.