Tag Archives: வைக்கம்
மகாதேவர் கோயில், வைக்கம்
அருள்மிகு மகாதேவர் கோயில், வைக்கம், கோட்டயம் மாவட்டம். கேரளா மாநிலம்.
+91- 4829-225 812
காலை 4 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | மகாதேவர் | |
தல விருட்சம் | – | ஆலமரம் | |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | வைக்கம் | |
மாவட்டம் | – | கோட்டயம் | |
மாநிலம் | – | கேரளா |
கரன் என்ற அசுரன் மோட்சம் அடைவதற்காக சிவனை நோக்கி கடும் தவம் இருந்தான். தவத்திற்கு மகிழ்ந்த சிவன் அவனிடம் 3 இலிங்கங்களைக் கொடுத்து அதை பிரதிஷ்டை செய்து பூஜை செய்யக் கூறினார். வலக்கையில் ஒரு இலிங்கமும், இடக்கையில் ஒரு இலிங்கமும், வாயில் ஒரு இலிங்கமுமாக அவன் எடுத்து சென்றான். அச்சமயத்தில் புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர், சிவனை நோக்கித் தவம் இருந்தார்.
இவரது தவத்தின் பலனாக கார்த்திகை மாதம் கிருஷ்ணபட்ச அஷ்டமி தினத்தில் சிவன் காட்சிதந்து,”வேண்டும் வரம் கேள்” என்றார். அதற்கு வியாக்ரபாதர்,”இதே நாளில் தங்களை இவ்விடத்தில் வந்து தரிசிப்பவர்களின் விருப்பத்தை நிறைவேற்றவேண்டும்” என வேண்டினார். (இதுவே “வைக்கத்தஷ்டமி” விழாவாகக் கொண்டாடப்படுகிறது)
இதன் பின் கரன், தனது வலக்கையில் கொண்டு வந்த இலிங்கத்தை வியாக்ரபாதரிடம் கொடுக்க, அவர் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். அந்த இடம் தான் “வைக்கம்” என அழைக்கப்படுகிறது.
கரன் இடக்கையில் கொண்டு வந்த இலிங்கத்தை ஏற்றமானூரில் மேற்கு நோக்கியும், வாயில் கடித்து கொண்டு வந்த மூன்றாவது இலிங்கத்தைக் கடித்துருத்தியில் கிழக்கு நோக்கியும் பிரதிஷ்டை செய்தான்.