Tag Archives: ஆண்டான்கோவில்
அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், ஆண்டான்கோவில்
அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், ஆண்டான்கோவில், திருக்கடுவாய்க்கரைப்புத்தூர், வலங்கைமான் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம்.
+91- 4374-265 130 (மாற்றங்களுக்குட்பட்டதுவை)
காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சொர்ணபுரீஸ்வரர், செம்பொன்நாதர் | |
அம்மன் | – | சொர்ணாம்பிகை, சிவசேகரி | |
தல விருட்சம் | – | வன்னி | |
தீர்த்தம் | – | திரிசூலகங்கை | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருக்கடுவாய்க்கரை தென்புத்தூர் | |
ஊர் | – | ஆண்டான்கோவில் | |
மாவட்டம் | – | திருவாரூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | அப்பர் |
முசுகுந்த சக்கரவர்த்தி திருவாரூரில் தியாகராஜர் கோயில் கட்டிக்கொண்டிருந்த காலம் அது. கண்டதேவர் என்ற மந்திரி திருவாரூர் கோயில் கட்டுவதற்காக, மலையடிவாரத்திலிருந்து கல் கொண்டு வரச் சென்றார். இருட்டி விட்டது. இவர் சிவதரிசனம் செய்யாமல் எப்போதும் உணவருந்த மாட்டார். எனவே சாலையோரமாக படுத்துவிட்டார்.
சிவன் இவரது கனவில் தோன்றி, “நான் அருகே உள்ள வன்னிமரத்தின் அடியில் உள்ளேன். என்னை தரிசித்து விட்டு உணவருந்து” என்று கூறிவிட்டு மறைந்து விடுகிறார். மந்திரி வந்து பார்த்த போது சிவன் கூறியபடியே வன்னிமரத்தடியில் ஒரு இலிங்கம் இருந்தது.