Tag Archives: அரியக்குடி

அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில், அரியக்குடி

அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில், அரியக்குடி, காரைக்குடி தாலுகா, சிவகங்கை மாவட்டம்.

+91 -4565 – 231 299 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 4 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

திருவேங்கடமுடையான்

தாயார்

ஸ்ரீதேவி, பூதேவி

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

அரியக்குடி

மாவட்டம்

சிவகங்கை

மாநிலம்

தமிழ்நாடு

நாட்டுக் கோட்டை நகரத்தார்களால் அமைக்கப்பட்ட புகழ்மிக்க வைணவத்தலம் இது. இப்பகுதி பிரமுகரான சேவுகன் செட்டியார், திருவேங்கடம் உடையானின் தீவிர பக்தராக இருந்தார். அவரைக் காண வரும் மக்கள் சுவாமிக்கு செலுத்த வேண்டிய காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வந்தனர். ஆண்டு தோறும் அந்த உண்டியலை நடந்தே சென்று திருப்பதியில் செலுத்தி வந்தார். வயதான நிலையில் ஒரு நாள் தலையில் உண்டியலை சுமந்து கொண்டு திருப்பதி மலையேறி செல்லும் வழியில் அவர் மயக்கமடைந்து கீழே விழுந்தார். அப்போது அவர் முன் எம்பெருமான்தோன்றினார். “தள்ளாத வயதில் மலையேறி வரவேண்டாம். பக்தன் இருக்குமிடத்திற்கு நான் வருகிறேன்எனக் கூறி மறைந்தார். ஊர் திரும்பிய அவரது கனவில் மீண்டும் தோன்றிய பெருமாள், “நாளை நீ மேற்கே செல். என் இடம் தெரியும்என்றார். அதன்படி மறுநாள் அவர் நடந்து சென்றபோது, தற்போது கோயில் இருக்குமிடத்தில் ஒரு துளசி செடியும், தேங்காய் காளாஞ்சியும் இருந்தன. அந்த இடத்தில் கோயில் கட்ட நிலத்தை சீர்செய்தபோது, தற்போதுள்ள மூலவர் சிலை நிலத்தின் அடியிலிருந்து கிடைத்தது. திருப்பதியை போன்று பெருமாளைத் தனியாக நிறுவ விரும்பாது, அலர்மேல் மங்கை தாயார், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகப் பிரதிஷ்டை செய்யப்பட்டது.