Tag Archives: திருத்தெற்றியம்பலம்- திருநாங்கூர்
அருள்மிகு செங்கண்மால் ரங்கநாதர் திருக்கோயில், திருத்தெற்றியம்பலம், திருநாங்கூர்
அருள்மிகு செங்கண்மால் ரங்கநாதர் திருக்கோயில், திருத்தெற்றியம்பலம், திருநாங்கூர் – 609 106. நாகப்பட்டினம் மாவட்டம்.
+91- 4364 – 275 689 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | செங்கண்மால், பள்ளிகொண்ட ரங்கநாதர் |
தாயார் | – | செங்கமலவல்லி |
தீர்த்தம் | – | சூரிய புஷ்கரணி |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் |
ஊர் | – | திருநாங்கூர் |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
இரண்யாட்சன் என்ற அசுரன் பூமியைத் தூக்கிக்கொண்டு பாதாள உலகத்தில் மறைத்து வைத்து விட்டான். தேவர்கள், முனிவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவரும் பூமியை காப்பாற்றுவதற்கு வராக அவதாரம் எடுக்க சம்மதித்தார். இதை கேட்டவுடன் மகாலட்சுமி,”பகவானே! நான் ஒரு நொடி கூட உங்களை விட்டு பிரியாமல் தங்களது மார்பில் குடியிருப்பவள். நீங்களோ என்னை விட்டு வராக அவதாரம் எடுக்கபோவதாகக் கூறுகிறீர்கள். நான் எப்படித் தனியாக இருப்பது” என வருத்தப்பட்டாள். இதே போல் ஆதிசேஷனும், “பரந்தாமா! நீங்கள் பூமியைக் காக்க பாதாள உலகம் சென்று விட்டால் என் கதி என்னாவது?” என வருத்தப்பட்டார்.
இதைக்கேட்ட பெருமாள், “பயப்படாதீர்கள். எல்லாம் நன்மைக்குத்தான். நீங்கள் இருவரும் “பலாசவனம்” சென்று என்னைத் தியானம் செய்யுங்கள். அங்கே சிவபெருமானும் வருவார். நான் இரண்யாட்சனை வதம் செய்துவிட்டு, உங்களுக்கு அனுக்கிரகம் செய்ய அங்கு வந்து விடுகிறேன்” என்றார்.