Tag Archives: திருவிடைவாசல்
அருள்மிகு புண்ணியகோடியப்பர் திருக்கோயில், திருவிடைவாசல்
அருள்மிகு புண்ணியகோடியப்பர் திருக்கோயில், திருவிடைவாசல், அத்திக்கடை வழி, குடவாசல் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம்.
+91- 4366-232 853,94433 32853, 99431 52999 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | புண்ணியகோடியப்பர் | |
உற்சவர் | – | திருவிடைவாயப்பர் | |
அம்மன் | – | அபிராமி | |
தல விருட்சம் | – | கஸ்தூரி அரளி | |
தீர்த்தம் | – | ஸ்ரீ தீர்த்தம் | |
ஆகமம் | – | சிவாகமம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருவிடைவாய் | |
ஊர் | – | திருவிடைவாசல் | |
மாவட்டம் | – | திருவாரூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | திருஞானசம்பந்தர் |
விடையன் என்னும் சூரிய குலத்து அரசன் கோயில் கட்டி வழிபட்ட தலமாதலால், இத்தலத்திற்கு “திருவிடைவாசல்” என்று பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அத்துடன் சிவனின் வாகனமாகவும், கொடியாகவும் “விடை” உள்ளது. சிவத்தலமான இங்கு விடையுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாலும், இத்தலம் திருவிடைவாசல் என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. இக்கோயில் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டிருக்கிறது. திருஞான சம்பந்தர் காலத்திற்கு முன்பிருந்தே இத்தலம் திருவிடைவாசல் என அழைக்கப்பட்டிருக்கிறது. எனவே தான் சம்பந்தர் தனது பாடலில் “விடைவாயே” என குறிப்பிட்டுப் பாடியிருக்கிறார்.
இத்தல சாஸ்தா குழந்தை வடிவில் பாலசாஸ்தாவாக அருளுகிறார். இத்தல தட்சிணாமூர்த்தி சிம்மாசன மண்டபத்தில் வீற்றிருக்கிறார். கோயிலின் மேற்கே காவிரியின் கிளைநதியான வெண்ணாறு, தெற்கே வெள்ளையாறு, வடக்கே பாண்டையாறு, கிழக்கே கடல் சூழ இத்தலம் அமைந்துள்ளது. கிழக்குப் பார்த்த கோயில். கோயில் பிரகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, நர்த்தன விநாயகர், இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நந்தி, கஜலட்சுமி, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், பாலசாஸ்தா, நவகிரகம், பைரவர், அய்யனார், மற்றும் சூரியன், சந்திரன் இருவரும் வாகனத்துடன் உள்ளனர்.