Tag Archives: கண்டமங்கலம்
அருள்மிகு குருசாமி அம்மையார் திருக்கோயில், கண்டமங்கலம்
அருள்மிகு குருசாமி அம்மையார் திருக்கோயில், கண்டமங்கலம், அரியூர், புதுச்சேரி மாவட்டம்.
+91 94866 23409, 98848 16773
(மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | குருசாமி அம்மையார் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | கண்டமங்கலம் | |
மாவட்டம் | – | புதுச்சேரி | |
மாநிலம் | – | புதுசேரி |
1890-ல் இருந்து 1895 வரை இந்தப் பகுதியில் குருசாமி வசித்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. குருசாமி அம்மையாரின் ஜீவ சமாதி, சுதந்திர காலத்துக்கு முன் – அதாவது 1947-க்கு முன் முறையான பராமரிப்பு இல்லாமல் இருந்து வந்ததாம். மேலே சொன்னபடி இரண்டு மாநிலத்துக்கும் இது எல்லையாக அமைந்தமையால், இந்த ஜீவ சமாதி அமைந்துள்ள இடத்துக்கு அருகே புதுவை எல்லையில் பிரெஞ்சுப் படையும், தமிழக எல்லையில் பிரிட்டிஷ் படையும் தனது வீரர்களை நிறுத்திக் காவல் காத்து வந்ததாம். எனவே, இரண்டு படைகளும் நிரந்தர முகாமிட்டிருக்கும் இடத்துக்கு அருகே உள்ள குருசாமி அம்மையார் ஜீவ சமாதி எவருக்கும் புலப்படவில்லை. இந்தப் பகுதி வழியாகப் பயணிப்போர் சற்று ஓய்வு எடுக்கலாம் என்று இங்கே அமர்ந்தாலும், அவர்களை விரட்டி விடுவார்கள் இரண்டு படையினரும். காரணம் – போராட்டக்காரர்களாக இருக்குமோ என்கிற சந்தேகத்தில் எவரையும் இதன் அருகே நெருங்க விட மாட்டார்களாம். தமிழகப் பகுதிக்கு ஒரு வழியாக சுதந்திரம் கிடைத்த பின்னும், பிரெஞ்சுக் குடியரசின் ஒரு பகுதியாகவே புதுவைப் பிரதேசம் தொடர்ந்து வந்தது. எனவே, குருசாமி அம்மையாரின் ஜீவ சமாதியை நிம்மதியாகத் தரிசிக்க வரும் பக்தர்களை, பிரெஞ்சுப் படைகள் சந்தேகக் கண் கொண்டே பார்க்க ஆரம்பித்தது. எங்கே, தமிழகம் மாதிரி தங்களது கட்டுப்பாட்டில் உள்ள புதுவைப் பிரதேசத்திலும் ஏதேனும் கலகம் விளைவித்து விடுவார்களோ என்று பிரெஞ்சுப் படை பயந்தது. காலம் உருண்டோடியது. எல்லாப் படைகளும் தொலைந்தொழிந்த பின்னர்தான் இந்த ஜீவ சமாதி, ஒரு வெளிச்சத்துக்கு வந்தது என்று சொல்லலாம்.