Tag Archives: மகேந்திரப்பள்ளி
அருள்மிகு திருமேனியழகர் திருக்கோயில், மகேந்திரப்பள்ளி
அருள்மிகு திருமேனியழகர் திருக்கோயில், மகேந்திரப்பள்ளி, கோயிலடிப் பாளையம், நாகப்பட்டினம் மாவட்டம்.
+91-4364- 292 309 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | திருமேனியழகர் | |
அம்மன் | – | வடிவாம்பிகை | |
தல விருட்சம் | – | கண்ட மரம், தாழை | |
தீர்த்தம் | – | மயேந்திர தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருமகேந்திரப் பள்ளி | |
ஊர் | – | மகேந்திரப் பள்ளி | |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | சம்பந்தர் |
இந்திரன், கவுதம மகரிஷியின் மனைவி அகலிகை மீது ஆசை கொண்டதால், அவரிடம் உடம்பெல்லாம் கண்ணாகும்படி சாபம் பெற்றான். விமோசனத்திற்காக பூலோகம் வந்த அவன், பல தலங்களில் இலிங்கப் பிரதிஷ்டை செய்து, சிவனை வழிபட்டான். அதில் ஒன்று மகேந்திரப்பள்ளியாகும். சிறப்பு மிக்க (மகா)இந்திரன் வழிபட்டதால், “மகேந்திரப்பள்ளி” என்ற சிறப்பு பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது. பிற்காலத்தில் இவ்விடத்தில் கோயில் எழுப்பப்பட்டது.
சிவன், அம்பாள் இருவரும் மிகவும் அழகாக காட்சி தருகின்றனர். எனவே சுவாமி, “திருமேனி யழகர்” என்றும், அம்பாள் “வடிவாம்பிகை” என்றும் அழைக்கப்படுகின்றனர்.
இங்கு வந்த திருஞானசம்பந்தர், சுவாமியை, “அழகர்” எனக் குறிப்பிட்டு பாடியிருக்கிறார். மதுரை அருகிலுள்ள அழகர் கோவிலில் உள்ளபெருமாள் “சுந்தரராஜன்” என்று சமஸ்கிருதத்திலும், “அழகர்” என்று தமிழிலும் வழங்கப்படுகிறார். அதுபோல, இத்தலத்தில் சிவன் “அழகர்” என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.