Tag Archives: திருப்பாச்சேத்தி
திருநோக்கிய அழகிய நாதர் திருக்கோயில், திருப்பாச்சேத்தி
அருள்மிகு திருநோக்கிய அழகிய நாதர் திருக்கோயில், திருப்பாச்சேத்தி, சிவகங்கை மாவட்டம்.
+91 04574266 303, 266 495
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | திருநோக்கிய அழகிய நாதர் | |
அம்மன் | – | மருநோக்கும் பூங்குழலி | |
தல விருட்சம் | – | பாரிஜாதம் | |
தீர்த்தம் | – | இலட்சுமி தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | திருப்பாச்சேத்தி | |
மாவட்டம் | – | சிவகங்கை | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சிவன் நெற்றிக்கண் கொண்ட கோபக்காரர். மன்மதன் ஒரு நல்ல காரியத்திற்காக சிவனை எழுப்பப்போக, அவனையே எரித்து சாம்பலாக்கி விட்டவர்.
இவர் அடிக்கடி கோபப்பட்டால் உலகம் தாங்காது என்பதால், பிரம்மா சிவனின் கோபத்தை அனலாகத் திரட்டி கடலுக்குள் சென்று புகுத்தி விட்டார். அந்த கோப அனல் சிறு குழந்தையாக ஜலத்தில் பிறந்தது. பிரமன் அந்த குழந்தைக்கு ஜலந்திரன் என பெயரிட்டார். ஜலந்திரன் முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் மிகவும் தொந்தரவு கொடுத்தான். இதை தேவர்கள் திருமாலிடம் தெரிவித்தனர். இவனை அழிக்க வேண்டுமானால் இவனது மனைவி பிருந்தையின் பதி விரதத்தன்மையை முதலில் அழிக்கவேண்டும் என திருமால் உணர்ந்தார். (பிருந்தை என்றால் துளசி என்று பொருள்). திருமாலே ஜலந்திரன் உருவெடுத்து பிருந்தையிடம் சென்றார். வந்திருப்பது திருமால் என்பதையும், தனது பதி விரதத்தன்மையை சோதிக்க அவர் வந்திருப்பதையும், அறிந்த பிருந்தை தீயில் புகுந்து உயிரை விட்டாள். பிருந்தை இறந்தவுடனேயே ஜலந்திரன் தன் வலிமையை இழந்து சிவனிடம் தோற்று போனான்.