Tag Archives: தேக்கம்பட்டி
அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயில், தேக்கம்பட்டி
அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயில், தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம் – 641301, கோயம்புத்தூர் மாவட்டம்.
+91 – 4254 – 222 286 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் 8 இரவு மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | வனபத்ர காளியம்மன் |
தல விருட்சம் | – | தொரத்திமரம் |
தீர்த்தம் | – | பவானி தீர்த்தம் |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன்பு |
ஊர் | – | தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம் |
மாவட்டம் | – | கோயம்புத்தூர் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
காலம் சொல்ல முடியாத காலத்தில் கட்டப்பட்டது இந்த வனபத்ர காளியம்மன் கோயில்.
சாகா வரம் பெற்ற மகிசாசூரனை அழிக்க அம்பாள் சிவனை நினைத்து வழிபட்டுப் பூசை செய்து சூரனை அழித்ததாள். அம்பாள் சிவனை நினைத்து இந்த வனத்தில் தியானம் செய்ததால், இங்குள்ள அம்மன் வனபத்ரகாளியம்மன் என்று பெயர் பெற்றது. இது தவிர ஆரவல்லி சூரவல்லி கதையோடும் இக்கோயில் தொடர்புடையதாக கூறப்படுகிறது.
மந்திரம், சூன்யம் ஆகியவற்றால் கொடிய ஆட்சி செய்த ஆரவல்லி, சூரவல்லி ஆகியோரை அடக்க பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் சென்று சிறைப்பட்டு, பின்னர் கிருஷ்ணன் அவனைக் காப்பாற்றினார். பின்பு, பாண்டவர்கள், அப்பெண்களை அடக்க, தங்களின் தங்கை மகன் அல்லிமுத்துவை அனுப்பி வைத்தனர்.