Tag Archives: குருசாமிபாளையம்

அருள்மிகு சிவசுப்ரமணியசுவாமி திருக்கோயில், குருசாமிபாளையம்

அருள்மிகு சிவசுப்ரமணியசுவாமி திருக்கோயில் குருசாமிபாளையம், நாமக்கல் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

சிவசுப்ரமணிய சுவாமி, பாலதண்டாயுதபாணி

(இரு மூலவர்)

அம்மன்

வள்ளி, தெய்வானை

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

குருசாமிபாளையம்

மாவட்டம்

நாமக்கல்

மாநிலம்

தமிழ்நாடு

முருகக் கடவுளின் படை வீரர்களின் தளபதியாகத் திகழ்ந்த வீரபாகு, இங்கே பாலதண்டாயுதபாணியின் திருவிக்கிரகத்தை வைத்து, மனமுருகி வழிபட்டார். இதில் மகிழ்ந்த முருகப்பெருமான், அவருக்கு இங்கு திருக்காட்சி தந்தார் என்றும் தெரிவிக்கிறது ஸ்தல புராணம். பிறகு, வீரபாகுவின் வம்சத்தவர்கள், முருகப்பெருமான் தரிசனம் தந்த இடத்தில் சிறியதொரு கோயிலை அமைத்து வழிபடத் துவங்கினர். இந்தத் தலத்தில், சிவசுப்ரமணிய ஸ்வாமி மற்றும் பாலதண்டாயுதபாணி என இரண்டு முருகப்பெருமான்களை தரிசிக்கலாம். பங்குனி உத்திரத்தின்போது, முருகப் பெருமானுக்குத் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். அப்போது, தங்கள் கையால் மாலை தொடுத்து, சுவாமிக்கு சார்த்தி வழிபட, விரைவில் கல்யாண மாலை நிச்சயம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கு வந்து பொங்கலிட்டு, அன்னதானம் செய்து வழிபட்டால் அந்த வருடம் விளைச்சல் அமோகமாக இருக்கும்; சந்ததி செழிக்கும் என்பது ஐதீகம். இங்கு ஏகாம்பரேஸ்வரர், வல்லப கணபதி, துர்கை, சனீஸ்வரர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.