Tag Archives: திருத்துறையூர்
சிஷ்டகுருநாதேஸ்வரர் கோயில், திருத்துறையூர்
அருள்மிகு சிஷ்டகுருநாதேஸ்வரர் கோயில், திருத்தளூர், திருத்துறையூர், பண்ருட்டி தாலுகா, கடலூர் மாவட்டம்.
+91- 4142 – 248 498, 94448 07393
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சிஷ்டகுருநாதேஸ்வரர் (பசுபதீஸ்வரர்) | |
உற்சவர் | – | சோமாஸ்கந்தர் | |
அம்மன் | – | சிவலோகநாயகி (பூங்கோதை) | |
தல விருட்சம் | – | கொன்றை | |
தீர்த்தம் | – | சூர்யபுஷ்கரணி | |
ஆகமம் | – | சிவாகமம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருத்தளூர் | |
ஊர் | – | திருத்துறையூர் | |
மாவட்டம் | – | கடலூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | சுந்தரர் |
கயிலாயத்தில் சிவன், பார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர் தென்திசைக்கு வந்தார். வழியில் அவர் பல தலங்களில் இலிங்கம் பிரதிஷ்டை செய்து சிவன் திருமணத்தை கண்டார். அவர் இத்தலம் வந்தபோது சிவனின் திருமணத்தை காண விரும்பி இலிங்கம், அம்பாளை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இருவரும் அவருக்கு மணக்கோலத்தில் காட்சி தந்தனர்.
இத்தலத்தில் அகத்தியர் சிவனை மேற்கு நோக்கியும், அம்பாளை வடக்கு நோக்கியும் வைத்து வழிபட்டாராம். அவளது திருமணம் வட திசையில் உள்ள கயிலாய மலையில் நடந்ததால் இவ்வாறு செய்தாராம். இதன் அடிப்படையில் அம்பாள் வாமதேவ முகமாக (வடக்கு பார்த்து) தனிச்சன்னதியில் இருக்கிறாள். அம்பாளை இக்கோலத்தில் காண்பது அபூர்வம்.