Tag Archives: காட்டுமன்னார் கோயில்
அருள்மிகு திருவனந்தீஸ்வரர் திருக்கோயில், காட்டுமன்னார் கோயில்
அருள்மிகு திருவனந்தீஸ்வரர் திருக்கோயில், காட்டுமன்னார் கோயில், கடலூர் மாவட்டம்.
+91 94864 57124 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 8.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
திருவனந்தீஸ்வரர் |
தாயார் |
– |
|
சவுந்தரநாயகி |
தல விருட்சம் |
– |
|
|
தீர்த்தம் |
– |
|
சூரிய சந்திர புஷ்கரணி |
பழமை |
– |
|
1000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் |
– |
|
திருவனந்தீஸ்வரம் |
ஊர் |
– |
|
காட்டுமன்னார் கோயில் |
மாவட்டம் |
– |
|
கடலூர் |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
அட்டநாகங்களில் (எட்டு நாகம்) ஒன்றான அனந்தன் தனது குறை நீங்க, இத்தல இறைவனை வழிபட இங்கு வந்தது. எனவே இவ்வூருக்கு திருவனந்தீஸ்வரம் என்ற புராணப் பெயர் இருந்தது. தற்போது காட்டுமன்னார்கோயில் எனப்படுகிறது. ஒருகாலத்தில் இங்கு வில்வ மரங்கள் அதிகமாக இருந்தன. கங்கை கொண்ட முதலாம் ராஜேந்திரசோழன், அனந்தீஸ்வரரைத் தனது குலதெய்வமாக வணங்கியுள்ளான். கோயில் கர்ப்பகிரகத்தை சுற்றிலும் வரலாற்று சிறப்பு மிக்க கல்வெட்டுகள் காணப்படுகின்றன. ஆதித்த கரிகாலன் கொலையுண்ட வரலாறு உள்ளிட்ட தகவல்கள் இதில் உள்ளன.
அனந்தன் பூஜை செய்ததற்கு ஆதாரமாக இங்குள்ள சோமஸ்கந்தரின் கையில் நாகம் இருக்கிறது. காலசர்ப்ப தோஷம் நீங்க அனந்தீஸ்வரருக்கும், அம்பாள் சவுந்தரநாயகிக்கும் அபிஷேகம் செய்து தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது. இது இயலாதவர்கள் வெள்ளியிலோ பிற உலோகங்களாலே ஆன நாக வடிவிலான உருவங்களை காணிக்கை செலுத்தலாம். சிவன் சன்னதி அருகில் சனிபகவானுக்கும் சன்னதி உள்ளதால், அஷ்டமத்துச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டம சனி ஆகியவற்றின் பிடியில் உள்ளோரும் அனந்தீஸ்வரரை வணங்கி வரலாம்.