Tag Archives: அலவாய்ப்பட்டி
அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில், அலவாய்ப்பட்டி
அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில், அலவாய்ப்பட்டி, ராசிபுரம், நாமக்கல் மாவட்டம்.
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
(நன்றி – தினமலர்)
மூலவர் |
– |
|
பாலசுப்ரமணியசுவாமி |
பழமை |
– |
|
500 வருடங்களுக்கு முன் |
ஊர் |
– |
|
அலவாய்ப்பட்டி |
மாவட்டம் |
– |
|
நாமக்கல் |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
ஒருகாலத்தில், குழந்தை இல்லாத ஏக்கத்தில் தவித்து மருகிய பக்தர் ஒருவர் பழநி முருகனை தரிசிக்க சென்றார். பக்தரின் கனவில் முருகப்பெருமான் தோன்றி, அலவாய் மலையைக் குறிப்பிட்டுச் சொல்லி, தான் அங்கு எழுந்தருளி இருப்பதாகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு வசதியாக மலையில் படிக்கட்டுகள் அமைத்துக் கொடுக்கும் படியும் கூறியதோடு, இந்தப் பணி முடியும் வேளையில், உனக்கு குழந்தைப் பிறக்கும் என்று அருளினாராம். அதன்படி, அந்தப் பக்தர் இத்தலம் வந்து கந்தனைத் தரிசித்து, அன்பர்களின் வசதிக்காக மலையில் படிக்கட்டுகள் அமைத்து கொடுத்தார். அந்தப் திருப்பணி முடிவுறும் நேரத்தில் அவருக்குக் குழந்தை பிறந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியதாகவும் சொல்வர். முருகப்பெருமான் கந்தசஷ்டி தினத்தில் சூரனை வதம் செய்து ஆட்கொண்டார். முருகனின் அருள்பெற்ற சூரபத்மன் தெற்கு திசையில் இருப்பதாக ஐதீகம். அவனுக்கு அருள்பாலிக்கும் விதமாக ஆஞ்சநேயர், இந்த மலையில் தெற்குப் பார்த்தபடி காட்சி தருகிறார். இவரை வணங்கினால், சனி தோஷங்கள் யாவும் விலகும் என்பது நம்பிக்கை. கொங்கணச் சித்தர் நீண்டகாலம் தங்கி வழிபட்டதால், இந்த மலை, “கொங்கண மலை” என அழைக்கப்பட்டு, தற்போது “அலவாய் மலை” எனப்படுகிறது. முருகப்பெருமானின் சந்நிதிக்கு முன்பாக, மயிலும் நந்தியும் ஒருங்கே அமைந்திருப்பது சிறப்பு. இங்கேயுள்ள சுனை நீர் வற்றவே வற்றாதாம்.