Tag Archives: குமாரசாமி பேட்டை
அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில், குமாரசாமி பேட்டை
அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில், குமாரசாமி பேட்டை, தர்மபுரி மாவட்டம்.
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – |
சிவசுப்ரமணிய சுவாமி |
|
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – |
குமாரசாமி பேட்டை |
|
மாவட்டம் | – | தர்மபுரி | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சுமார் 300 வருடங்களுக்கு முன்பு, முருகப்பெருமானை நோக்கிக் கடும் தவம் இருந்தார் சித்தர் ஒருவர். தவத்தின் போது ஒருநாள் இரவு, அவருடைய கை வேறு, கால் வேறு, உடல் வேறு எனத் தனித்தனியாகக் கிடந்தது. அதைக் கண்டு ஊரே சிலிர்த்தது; அவரை வணங்கியது. அதையடுத்து, “நான் சமாதி நிலையை அடைந்ததும், அந்த இடத்தில் முருகப்பெருமான் சிலை வைத்து, அவருக்கு ஆலயம் அமைத்து வழிபடுங்கள்” என்று சித்தர் அருளினார். அதன்படி ஒருநாள் அவர் சமாதி அடைய, அங்கே அழகிய சிவசுப்ரமணிய ஸ்வாமி சிலை வைத்து, ஊர்மக்கள் ஒன்றுகூடி, அங்கே முருகனுக்கு கோயில் அமைத்தனர். அன்று துவங்கி இன்றளவும், அனைவருக்கும் அருளையும் பொருளையும் அள்ளித் தருகிறார் முருகக் கடவுள்.