Category Archives: கிருட்டிணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் – ஆலயங்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் – ஆலயங்கள் |
|
அருள்மிகு |
ஊர் |
ஐராவதேஸ்வரர் | அத்திமுகம்– ஓசூர் |
ஸ்ரீமத் வெங்கடேஸ்வர சுவாமி | ஓசூர் |
சந்திரசூடேசுவரர் | ஓசூர் |
காலபைரவர் | கல்லுக்குறிக்கை |
வரதராஜப்பெருமாள் | சூளகிரி |
சித்தி விநாயகர் | பாகலூர் |
அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், சூளகிரி
அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், சூளகிரி, ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்.
+91-4344-252608 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 5 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
வரதராஜப்பெருமாள் |
தாயார் |
– |
|
பெருந்தேவி, மகாலட்சுமி |
பழமை |
– |
|
1000 வருடங்களுக்கு முன் |
ஊர் |
– |
|
சூளகிரி |
மாவட்டம் |
– |
|
கிருஷ்ணகிரி |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
ஒரு முறை பஞ்ச பாண்டவர்கள் துரியோதனனிடம் சூதாட்டத்தில் தோற்று வன வாசம் செல்கின்றனர். அப்போது பல இடங்களுக்குச் சென்று விட்டு சூளகிரி மலைப்பகுதிக்கு வருகின்றனர். பஞ்சபாண்டவர்களில் ஒருவரான அர்ஜூனன் பெருமாளை வழிபடுவதற்காக அங்கிருந்த மலையில் கல்லெடுத்து கோயிலமைத்து வழிபாடு செய்கிறான். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அர்ஜூனன் பிரதிஷ்டை செய்த இவ்விடம் தமிழகத் திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. அர்ஜூனன் பிரதிஷ்டை செய்ததற்கு அடையாளமாக இன்றும் இந்த மலையில் “ஐந்து குண்டு” என்ற ஐந்து குன்றுகள் உள்ளன. மேலும் இந்த மலையைப் பார்த்தால் சூலம் போன்ற அமைப்பில் இருக்கும். இதனாலேயே இப்பகுதி சூளகிரி என அழைக்கப்படுகிறது.
ஏழு மலை, ஏழு கோட்டை, ஏழு மகா துவாரங்கள் ஏழு அடி உயரப் பெருமாள். இந்த ஏழுமலை வாசனுக்கு இப்படி எல்லாமே ஏழு ஏழாக அமைந்திருக்கிறது. இங்கு வரதராஜப்பெருமாள் தாயார் பெருந்தேவியுடன் அருளாட்சி செய்கிறார்.