Category Archives: கிருட்டிணகிரி
சந்திரசூடேசுவரர் திருக்கோயில், ஓசூர்
அருள்மிகு சந்திரசூடேசுவரர் திருக்கோயில், ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்.
+91- 4344292 870, 98944 71638
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சந்திர சூடேசுவரர் | |
அம்மன் | – | மரகதாம்பிகை | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | பச்சைக் குளம் | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | பத்ரகாசி | |
ஊர் | – | ஓசூர் | |
மாவட்டம் | – | கிருஷ்ணகிரி | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
கயிலாயத்திலிருந்து ஈசனும் அம்பாளும் வரும்போது ஈசன், மரகதம், மாணிக்கம், நவரத்தினம் பதித்த உடும்பு உருவெடுத்து வருகிறார். அந்த உடும்பைப் பிடிக்க அம்பாள் பின் தொடருகிறார். காடு மேடு தாண்டி இப்பகுதிக்கு வருகிறார்.அப்படி வரும்போது முத்கலர், உத்சாயனர் என்ற இரு பெரும் முனிவர்கள் இம்மலையில் தவமிருக்கின்றனர்.
தங்களது தவ ஞானத்தால் ஈசன் என்று உணர்ந்து அந்த உடும்பைப் பிடிக்க எண்ணினர். இருவரிடமும் மாட்டிக்கொள்ளாது இருக்க ஈசன் மறைந்து விடுகிறார்.
ஐராவதேஸ்வரர் திருக்கோயில், அத்திமுகம், ஓசூர்
அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில், அத்திமுகம், ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்.
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ஐராவதேஸ்வரர், அழகேஸ்வரர் | |
அம்மன் | – | காமாட்சி, அகிலாண்டேஸ்வரி | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | ஓசூர், அத்திமுகம் | |
மாவட்டம் | – | கிருஷ்ணகிரி | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
விருத்தாசூரன் என்ற அரக்கன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பெரும் துன்பத்தை விளைவித்து வந்தான். இதனால் வருத்தமுற்ற தேவர்கள் தேவர்களின் தலைவனான இந்திரனிடம் முறையிட்டனர். கோபம் கொண்ட இந்திரன் தனது வாகனமான ஐராவதத்துடன் சென்று விருத்தாசூரனுடன் போரிட்டு அவனை அழித்தான். இதனால் இந்திரனுக்கும் அவனது யானை ஐராவதத்திற்கும் பிரம்மகத்தி தோசம் பற்றிக்கொண்டது.
பிரம்மகத்தி தோசம் நீங்க அகத்திய நதிக்கரையில் சிவலிங்கம் பிரதிட்டை செய்து வழிபட வேண்டுமென அசரீரி கூறியது. இதையடுத்து இந்திரனும் ஐராவதமும் அகத்திய நதி ஓடும் இத்தலத்திற்கு வந்து சிவலிங்கம் பிரதிட்டை செய்து வழிபட்டு தோசம் நீங்கப் பெற்றனர்.