Category Archives: ஈரோடு

ஈரோடு மாவட்டம் – ஆலயங்கள்

ஈரோடு மாவட்டம் ஆலயங்கள்

அருள்மிகு

ஊர்

சந்திரசேகரர் அத்தாணி
பத்திரகாளி அம்மன் அந்தியூர்
அழகுராயப்பெருமான் இருகாலூர்

தம்பிராட்டியம்மன்

ஈங்கூர்

கஸ்தூரி ரங்கப் பெருமாள் ஈரோடு

கொங்காலம்மன்

ஈரோடு

மகிமாலீஸ்வரர் ஈரோடு
ஆருத்ரா கபாலீஸ்வரர் எழுமாத்தூர்

மலையாள பகவதி

கணக்கன்பாளையம்

வெற்றி வேலாயுதசுவாமி கதித்த மலை
கோதண்டராமர் கருங்கல்பாளையம்

சின்ன மாரியம்மன்

கருங்கல்பாளையம்

நட்டாற்றீஸ்வரர் காங்கயம்பாளையம்
பச்சோட்டு ஆவுடையார் காங்கேயம் மடவிளாகம்

சீதேவி அம்மன்

காஞ்சிக்கோயில்

மகுடேஸ்வரர் கொடுமுடி

பால தண்டாயுதபாணி

கொருமடுவு

ஐயப்பன் கோபி

சாரதா மாரியம்மன்

கோபி

பால தண்டாயுதபாணி கோபி

பண்ணாரி மாரியம்மன்

சத்தியமங்கலம், பண்ணாரி

சுப்ரமணியசுவாமி சென்னிமலை

ராமலிங்க சவுடேசுவரி

தாசப்பக்கவுடர்புதூர்

காடு ஹனுமந்தராய சுவாமி

தாராபுரம்

வேலாயுத சுவாமி திண்டல்மலை
ஆதிகேசவரப்பெருமாள் சுவாமி பவானி
காயத்ரி லிங்கேஸ்வரர் பவானி
சங்கமேஸ்வரர் பவானி
அமரபணீஸ்வரர் பாரியூர்
ஆதிநாராயணப்பெருமாள் பாரியூர்

கொண்டத்து காளியம்மன்

பாரியூர்

பெரிய மாரியம்மன்

பிரப் ரோடு

இலட்சுமி நாராயணர் புதூர்
கோட்டை முனீஸ்வரர் பெருந்துறை
வனவேங்கடப் பெருமாள் பெருந்துறை
கருப்பண்ணசாமி பொய்யேரிக்கரை

செல்வ ஆஞ்சநேயர்

மாரியப்பா நகர், சென்னிமலை

அருள்மிகு வனவேங்கடப் பெருமாள் திருக்கோயில், பெருந்துறை

அருள்மிகு வனவேங்கடப் பெருமாள் திருக்கோயில், பெருந்துறை, துடுப்பதி, ஈரோடு மாவட்டம்.

+91-4294 – 245 617 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

வனவேங்கடப் பெருமாள்

தல விருட்சம்

வேப்ப மரம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

பெருந்துறை

மாவட்டம்

ஈரோடு

மாநிலம்

தமிழ்நாடு

400 ஆண்டுகளுக்கு முன்பே இக்கோயில் இங்கு அமைந்திருக்கிறது. இக்கோயில் குறித்த தெளிவான வரலாறு ஏதுமில்லாவிடினும், செவி வழிச் செய்திகள் இக்கோயிலின் சிறப்பை வெளிப்படுத்துகின்றன. கோயிலின் பழமையைப் பறைசாற்றும் வகையில் சில கல்வெட்டுக்கள் தென்படுகின்றன.

வேப்ப மரம் பொதுவாக அம்பாளுக்கு உகந்தது. ஆனால், ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா துடுப்பதி அருகேயுள்ள ஸ்ரீரங்ககவுண்டன் பாளையம் கிராமத்தில் வேப்ப மரத்தடியில் வீற்றிருந்து பல நூறு ஆண்டுகளாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் ஸ்ரீவனவேங்கடப் பெருமாள். ஊருக்கு வெளியே, வயல்களுக்கு நடுவே பசுமை போர்த்திய பின்னணியில் அமைந்திருக்கிறது இக்கோயில். மிகப் பிரம்மாண்டமான வேப்பமரம் கோயிலின் பெரும் பகுதியை வியாபித்திருக்கிறது. மரத்தடியில் எவ்வித சிலைகளும் இல்லை. ஐந்து கற்கள் மட்டுமே அமைந்துள்ளன. இவற்றையே வன வேங்கடப் பெருமாளாகவும், தாயாராகவும் உருவகம் செய்து பக்தர்கள் வழிபடுகின்றனர். ஸ்ரீரங்ககவுண்டன்பாளையத்தை சேர்ந்த 40 குடும்பங்கள் வனவேங்கடப் பெருமாளை குலதெய்வமாக வணங்கி வருகின்றனர்.