Category Archives: ஈரோடு

அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், கருங்கல்பாளையம்

அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், கருங்கல்பாளையம், ஈரோடு மாவட்டம்.

+91-424 – 221 28 16 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

கோதண்டராமர்

தாயார்

சீதா பிராட்டி

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

கருங்கல்பாளையம்

மாவட்டம்

ஈரோடு

மாநிலம்

தமிழ்நாடு

திருமணம், சமூக மற்றும் மத வழிபாடு கூட்டங்கள் நடத்த ஏதுவாக 1974ம் ஆண்டில் ஈரோடு ரங்கபவனம் டிரஸ்ட் சார்பில் சமுதாயக் கூடம் ஒன்று நிறுவப்பட்டது. இங்கு சித்தி விநாயகர் கோயிலும், நவக்கிரகங்கள் சன்னதியும் கட்டப்பட்டன. கும்பாபிஷேகத்தை காஞ்சி காமகோடி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி நடத்தி வைத்தார். தொடர்ந்து ஸ்ரீ கோதண்டராமசுவாமி கோயில் கட்டப்பட்டது. மூலஸ்தானத்தில் ஸ்ரீகோதண்டராமர், சீதா பிராட்டி, இலட்சுமணர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலில் மகாஸம்ப்ரோஷணம் அஹோபில மடத்தின் 44ம் பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கர் ஜீயர் சுவாமியால் நடத்தப்பட்டது.

ஒவ்வொரு மாதமும் புனர்பூச நட்சத்திரத்தன்று கோதண்டராம சுவாமிக்கும், சித்திரை நட்சத்திரத்தில் சக்கரத்தாழ்வாருக்கும், மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயருக்கும், சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கும் கூட்டு வழிபாடு மற்றும் பூஜைகள் நடந்து வருகின்றன.

அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் திருக்கோயில், பெருந்துறை

அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் திருக்கோயில், பெருந்துறை, ஈரோடு மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கோட்டை முனீஸ்வரர்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் பெருந்துறை
மாவட்டம் ஈரோடு
மாநிலம் தமிழ்நாடு

மைசூர் மகாராஜாவின் அரசாங்கப் பிரதிநிதி ஒருவன், கோயம்புத்தூர் பகுதியில் கோட்டை கட்டி ஆட்சி செய்து வந்தான். எதிரிகள் தேச எல்லைக்குள் வராமலும், அப்படி யாரேனும் வந்து போரிட்டாலும் இவனுக்கே வெற்றி கிடைக்குமாறும் காத்தருளினார் முனீஸ்வர சுவாமி. இதனால் கோட்டை முனீஸ்வரர் என்ற திருநாமம் உண்டானது என்கின்றனர் பக்தர்கள்.

மாவிளக்கேற்றி அம்மனை வழிபட்டால், குடும்பமும் அந்தக் குடும்பத்தின் நிலமும் செழிக்கும் என்பது நம்பிக்கை. அதேபோல், கரும்பு படைத்து முனீஸ்வரரை வணங்கினால், எதிரிகள் தொல்லை விலகும். புதிதாக வாகனம் வாங்குபவர்கள் கோட்டை முனீஸ்வரருக்கு முன் வண்டியை நிறுத்தி தீபாராதனை காட்டி, தேங்காய் உடைத்து வழிபட்ட பின்பே ஓட்டிச் செல்வார்கள். இதனால் கண் திருஷ்டியில் இருந்து தப்பிக்கலாம் என்பது ஐதீகம்.