Tag Archives: மத்தம்பாளையம்

அருள்மிகு காரணவிநாயகர் திருக்கோயில், மத்தம்பாளையம்

அருள்மிகு காரணவிநாயகர் திருக்கோயில், மத்தம்பாளையம், கோயம்புத்தூர் மாவட்டம்

+91-4254 – 272 900

காலை 8 மணி முதல் 6 மணி வரை கோயில் தொடர்ந்து திறந்திருக்கும்

மூலவர்: – காரணவிநாயகர்

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – மத்தம்பாளையம்

மாவட்டம்: – கோயம்புத்தூர்

மாநிலம்: – தமிழ்நாடு

வரலாறு:

முன்னொரு காலத்தில் இவ்வூரைத் தாண்டியுள்ள மற்றொரு கிராம மக்கள் தங்கள் ஊரில் விநாயகர் கோயில் அமைக்க விரும்பி ஒரு சிலையை மாட்டு வண்டியில் எடுத்து வந்தனர். ஓரிடத்தில் வண்டியின் அச்சு முறியவே சிலையை இறக்கிவிட்டு, பழுது பார்த்தனர். மீண்டும் வண்டியில் சிலையைத் தூக்கி வைக்க முயன்ற போது அவர்களால் அசைக்கவே முடியவில்லை. அங்கேயே சிலையை வைத்து சிறு கோயிலும் கட்டினர். ஒருமுறை ஆங்கிலேயர்கள் அவ் வழியே ரோடு அமைப்பதற்காக கோயிலை அகற்றும்படி மக்களிடம் கூறினர். மக்கள் மறுக்கவே, தாங்களே கோயிலை அகற்ற ஏற்பாடு செய்தனர். அன்றுஇரவில் ஒரு ஆங்கில அதிகாரியின் கனவில் ஏராளாமான யானைகள் அவரை விரட்டுவது போல் கனவு வந்தது.

இதனால் மனம் மாறிய அந்த அதிகாரி, கோயில் இருந்த இடத்தில் மட்டும் வளைவாக ரோடு அமைக்க ஏற்பாடு செய்தார். இப்போதும் இவ்விடத்தில் ரோடு வளைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.