Tag Archives: வசவப்புரம்

அருள்மிகு அலங்கார செல்வி அம்மன் திருக்கோயில், வசவப்புரம்

அருள்மிகு அலங்கார செல்வி அம்மன் திருக்கோயில், வசவப்புரம், தூத்துக்குடி மாவட்டம்

காலை 7 மணி முதல் 12 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – அலங்காரச் செல்வி அம்மன்

பழமை: – 500 வருடங்களுக்கு முன்பு

ஊர்: – வசவப்புரம்

மாவட்டம்: – தூத்துக்குடி

மாநிலம்: – தமிழ்நாடு

கலியுகத்தில் கணபதியும், துர்க்கையும் கண்கண்ட தெய்வமாக போற்றப்படுகின்றன. வெற்றிக்கு காளியின் அம்சமான துர்க்கையே அதிபதி. இவளே மகாகாளியாகவும் , மகாலட்சுமியாகவும், மகாசரசுவதியாகவும் விளங்குகிறாள். துன்பங்களை போக்கி, இன்பத்தைக் கொடுப்பவள் மகா சக்தி. காளி, “துர்க்கமன்என்ற அரக்கனை போரில் வதம் செய்ததாலும், ஆன்மாக்களை (அடியார்களை) அரண் போன்று காப்பாற்றுவதால் துர்க்கையென்றும் பெயர் பெற்றார். தென்மாவட்டங்களில் ஊருக்கு காவல் தெய்வமாக விளங்கும் காளியின் அம்சம் கொண்ட வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயில்கள் உள்ளன. வடக்கு வாசலை கொண்ட அலங்கார செல்வி அம்மன் கோயில் பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டுள்ளன. குறிப்பாக வசவப்பபுரம் அலங்கார செல்வி அம்மன் கோயிலில் அலங்கார செல்வி அம்மன் நிறுவனம் செய்யப்பட்டுள்ளது.