Tag Archives: மேல் சேவூர்

அருள்மிகு ரிஷபபுரீஸ்வரர் திருக்கோயில், மேல் சேவூர்

அருள்மிகு ரிஷபபுரீஸ்வரர் திருக்கோயில், மேல் சேவூர், செஞ்சி, விழுப்புரம் மாவட்டம்.

+91 99621 72565, 97877 20215, 99433 22152

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

ரிஷபபுரீஸ்வரர்

அம்மன்

மங்களாம்பிகை

தல விருட்சம்

புன்னை

தீர்த்தம்

சங்கராபரணி

பழமை

1000 வருடங்களுக்கு முன்

ஊர்

மேல் சேவூர்

மாவட்டம்

விழுப்புரம்

மாநிலம்

தமிழ்நாடு

ஒரு முறை சங்கரா பரணி நதியில் வெள்ளம் புரண்டோடி ஊரையே அழிக்கும் நிலை ஏற்பட்டது. இங்குள்ள அம்மன் மங்களாம்பிகையின் கால்பட்டு வெள்ளம் தணிந்தது. திருவாதிரைத் திருவிழாவில் நந்தீஸ்வரரும், மங்களாம்பிகையும் மதியம் புறப்பட்டு வருவர். சிவனை கண்ட அம்மன், சினந்து பாதி வழியிலேயே தன் பிள்ளைகளுடன் கோயில் வந்தடைவார். தனக்கும், பரவை நாச்சியார்க்கும் ஏற்பட்ட பிணக்கைத் தீர்த்திட பெருமான் இரவில் இருமுறை தூது சென்ற நன்றியால் சுந்தரர் அம்மனிடம் தூது சென்று இருவரையும் சேர்த்து வைப்பார். சுந்தரர் தூது சென்ற சிறப்பு ஆதிரைத் திருநாளில் இங்கு மட்டுமே நடைபெறுகிறது. இங்குள்ள ஆற்றை சங்கரன் தனது பரணியால் சுத்திகரித்ததால் சங்கரா பரணி என்று அழைக்கப்படுகிறது.

வெளிச்சுற்றில் வலது புறத்தில் விநாயகர் சன்னதியும், கிழக்கில் அறுபது கல்தூண்கள் தாங்கிய மகா மண்டபம். கொடிமரம், பலிபீடம், சிவபெருமானை நோக்கும் நந்தி. கருவறையின் வாயிற் கதவுகளுக்கு இருபுறமும் விநாயகர், முருகன். மேற்புறத்தில் நரசிம்மரின் கற்சிற்பம். கல்தூண்களின் கீழ்ப்பகுதியில் யாளி உருவம். கருவறை முன்னர் சுமார் ஒன்பதடி உயரத்தில் துவார பாலகர்கள். இவை அனைத்தும் பல்லவ மன்னர்களின் கைவண்ணத்தில் உருவானது.