Tag Archives: இரும்பை
அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில், இரும்பை
அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில், இரும்பை, ஆரோவில், விழுப்புரம் மாவட்டம்.
+91- 413 – 268 8943, 98435 26601 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6.30 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | மகாகாளேஸ்வரர் | |
உற்சவர் | – | சந்திரசேகரர் | |
அம்மன் | – | குயில்மொழி நாயகி | |
தல விருட்சம் | – | புன்னை | |
தீர்த்தம் | – | மாகாள தீர்த்தம் | |
ஆகமம் | – | சிவாகமம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருஇரும்பை மாகாளம் | |
ஊர் | – | இரும்பை | |
மாவட்டம் | – | விழுப்புரம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | திருஞானசம்பந்தர் |
சிவனிடம் வரம் பெற்ற அம்பன், அம்பாசுரன் எனும் இரு அசுரர்கள் பார்வதி தேவியின் மீது ஆசை கொண்டனர். அவர்கள் இருவரும் பார்வதியைத் திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினர். அவர்களைப் பார்வதிதேவி, மகாகாளி அவதாரம் எடுத்து வதம் செய்தாள். இதனால் பிரம்மகத்தி தோஷம் பிடித்த அம்பாள், இத்தலத்தில் சிவனை நோக்கித் தவம் செய்து, தோஷம் நீங்கப்பெற்றாள்.
பிற்காலத்தில் மகாகாளர் எனும் மகரிஷி சிவதல யாத்திரையின் போது, வடக்கே உஜ்ஜயினியில் ஒரு இலிங்கத்தையும், தெற்கே மயிலாடுதுறைக்கு அருகே அம்பர் மாகாளத்தில் ஒரு இலிங்கத்தையும் பிரதிஷ்டை செய்து வணங்கினார்.
அவர் கிழக்கே வந்தபோது, இத்தலத்தின் மகிமையை அறிந்து, இங்கேயும் இலிங்கம் ஒன்றைப் பிரதிஷ்டை செய்து வணங்கினார். சுவாமியும் “மகாகாளநாதர்” என்ற பெயர் பெற்றார்.