Tag Archives: திருப்புட்குழி
அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில், திருப்புட்குழி
அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில், திருப்புட்குழி– 631 502, காஞ்சிபுரம் மாவட்டம்.
+91- 44-2724 6501 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | விஜயராகவப் பெருமாள் |
தாயார் | – | மரகதவல்லி |
தல விருட்சம் | – | பாதிரி |
தீர்த்தம் | – | ஜடாயு தீர்த்தம் |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் |
ஊர் | – | திருப்புட்குழி |
மாவட்டம் | – | காஞ்சிபுரம் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
ராவணன் சீதையை சிறை எடுத்துச் செல்லும் வழியில் பறவைகளின் அரசனாகிய ஜடாயு சீதையை மீட்க இராவணனுடன் போரிட்டது. அவனால் வெட்டப்பட்டு மரணத்தருவாயில் இருந்தது. சீதையை தேடி அவ்வழியே வந்த ராமலட்சுமணரிடம் சீதையை ராவணன் கடத்தி சென்ற விஷயத்தை தெரிவித்தது. மரணத்தை எதிர் நோக்கி இருக்கும் தனக்கு இராமனே ஈமக்கிரியைகள் செய்ய வேண்டும் எனவும், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக காட்சி தந்து அருள வேண்டும் எனவும் வேண்டியபடி உயிர்விட்டது. அதன்படி ஜடாயுவைத் தன் வலதுபக்கம் வைத்து தீ மூட்டி ஈமக்கிரியைகளை செய்தார். இதனால் ஏற்பட்ட வெப்பம் தாளாமல் வலப்புறம் இருந்த ஸ்ரீதேவி தாயார் இடப்புறமும், இடப்புறம் இருந்த பூதேவித்தாயார் வலப்புறமும் மாறி அருள்பாலிப்பதாக புராணங்கள் கூறுகிறது. எனவே தான் இங்கு மட்டும் தாயார் சன்னதி பெருமாளுக்கு இடது புறமும், ஆண்டாள் சன்னதி பெருமாளுக்கு வலதுபுறமும் அமைந்துள்ளது குறிப்படத்தக்கது.
ஜடாயுவின் வேண்டுகோளின் படி ராமர், தன் அம்பினால் உண்டாக்கப்பட்ட தீர்த்தத்தில் ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்தார். எனவே இங்கு தீர்த்தம் ஜடாயு புஷ்கரிணி என அழைக்கப்படுகிறது.