Category Archives: சேலம்

அருள்மிகு கோதண்டபாணி ராமர் திருக்கோயில், அயோத்தியாப்பட்டணம்

அருள்மிகு கோதண்டபாணி ராமர் திருக்கோயில், அயோத்தியாப்பட்டணம், சேலம் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

இராமர்

தாயார்

சீதை

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

அயோத்தியாப்பட்டணம்

மாவட்டம்

சேலம்

மாநிலம்

தமிழ்நாடு

இராவண வதம் முடிந்து இராமர் பட்டாபிஷேகம் செய்து கொண்ட புராதன சிறப்பு மிக்க கோயில் சேலம் அயோத்தியாபட்டணம் இராமர் கோயில். வட இந்தியா சென்று அயோத்தியில் உள்ள ராமரை வழிபட வேண்டும் என்று அவசியம் இல்லை. சேலம் அருகே உள்ள அயோத்தியாபட்டணம் இராமரை வழிபட்டாலே போதும். சகல புண்ணியங்களும் கிட்டும். சீதையை மீட்க வானரப் படையுடன் இலங்கை சென்று இராவணனை கொன்ற இராமர் இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு காலடி வைத்தார். அயோத்திக்கு திரும்ப வேண்டும் என்றால் சைலமலைக் குன்றுகள் வழியாகய்த்தான் திரும்ப வேண்டும். இராமர், சீதை, இலட்சுமணன், அனுமார், சுக்ரீவர், விபீஷணர் அனைவரும் சைலமலைக் குன்றுப் பகுதியை வந்தடைந்த போது லேசாக இருட்டத் தொடங்கியது. களைப்பாறி விட்டு செல்லலாம் என்று நினைத்த போது, சிறிய அளவிலான கோயில் ஒன்று தென்பட்டது. இங்கு இராமர், சீதை, இலட்சுமணன் உட்பட அனைவரும் அன்றிரவு தங்கினர். விடிந்து எழுந்த போது பட்டாபிஷேகத்திற்கான நாள், நட்சத்திரம் நெருங்கி விட்டது. நேரம் தவறினால் ராஜகுற்றமாகிவிடும் என்று எண்ணிய இராமர் இந்தக் கோயிலிலேயே பட்டாபிஷேகம் செய்து கொண்டதாகவும், பின்பு அயோத்தி சென்று முறைப்படி பட்டாபிஷேகம் முடித்தார் என்றும் சொல்வதுண்டு.

புராதனச் சிறப்போடு, ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான அதேசமயம் கம்பீரமான தோரணையில் வீற்றிருக்கிறது அயோத்தியாபட்டணம் கோதண்டபாணி இராமர் கோயில். இராமர் காலடி பட்டதால் அயோத்தியாபட்டணம் என்ற பெயரை இவ்விடம் பெற்றது. இங்குள்ள ஒவ்வொரு கல்லும் கவி பாடுகின்றன. கலைநுட்ப வேலைப்பாடுகள் மிக்க தூண்களை தட்டினால் பல்வேறு இசை ஒலிகள் எழுந்து மனதை மயக்குகின்றன. தாரமங்கலம் கைலாசநாதர் பெருமாள் கோயில், திருச்செங்கோடு முருகன் கோயில், மதுரை திருமலை நாயக்கர் மஹால் ஆகியவற்றுடன் இந்த கோயிலும் ஒரே காலத்தில் திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது என்று வரலாறு சொல்கிறது. இதற்கு இங்குள்ள பிரமாண்டமான சிற்பங்களே சாட்சி.

அருள்மிகு வீரபத்திரர் திருக்கோயில், குகை, சேலம்

அருள்மிகு வீரபத்திரர் திருக்கோயில், குகை, சேலம், சேலம் மாவட்டம்.

+91- 427 – 2218 543, 99409 90984 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வீரபத்திரர்
அம்மன் வேதநாயகி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் கிணறு
ஆகமம் சிவாகமம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் ஸ்ரீசைலம்
ஊர் சேலம்
மாவட்டம் சேலம்
மாநிலம் தமிழ்நாடு

சிவத்தல யாத்திரை சென்ற அகத்தியர், இத்தலத்திற்கு அருகிலுள்ள ஊத்துமலையில் சிலகாலம் தங்கினார். அங்கு அவர் இலிங்கப் பிரதிஷ்டை செய்து, சிவ தரிசனம் வேண்டி பூஜை செய்தார். சிவன் காட்சி தந்தபோது அகத்தியர் அவரிடம், தனக்கு வீரபத்திரர் வடிவில் காட்சி தரும்படி வேண்டினார். சிவனும், வீரபத்திரராக காட்சி தந்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்கு வீரபத்திரருக்கு கோயில் கட்டப்பட்டது.

மூலஸ்தானத்தில் வீரபத்திரர் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். இடக்கரத்தில் தண்டாயுதத்திற்குப் பதிலாக கேடயம் வைத்திருக்கிறார். வலப்புறம் தட்சனும், இடப்புறம் பத்திரகாளியும் இருக்கின்றனர். காளியின் கைகளில் பாசம், சூலம், உடுக்கை ஆகியவை உள்ளன. தேய்பிறை அஷ்டமியில் வீரபத்திரருக்கு விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜை நடக்கிறது. சுகவன முனிவர், இவரைத் தரிசனம் செய்துள்ளார். வீரபத்திரர், சிவனின் அம்சம் என்பதால் சிவலிங்கம் ஒன்றை ஒரு சன்னதியில் பிரதிஷ்டை செய்துள்ளனர். இவர், “ஜங்கமேஸ்வரர்என்றழைக் கப்படுகிறார். இவரையும் வீரபத்திரராகவே பாவித்துப் பூஜை செய்கின்றனர்.