Category Archives: கடலூர்
இளமையாக்கினார் கோயில், சிதம்பரம்
அருள்மிகு இளமையாக்கினார் கோயில், சிதம்பரம், கடலூர் மாவட்டம்.
+91 4144 – 220 500, 94426 12650
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | திருப்புலீஸ்வரர் | |
அம்மன் | – | திரிபுரசுந்தரி | |
தல விருட்சம் | – | தில்லை மரம் | |
தீர்த்தம் | – | இளமை தீர்த்தம் | |
ஆகமம் | – | காமீகம் | |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருப்புலீஸ்வரம் | |
ஊர் | – | சிதம்பரம் | |
மாவட்டம் | – | கடலூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சிவபெருமானின் நாட்டிய தரிசனம் காண விரும்பிய வியாக்ரபாதர், சிதம்பரம் வந்தார். இங்கிருந்த தீர்த்தக்கரையில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, குடில் அமைத்து தவமிருந்தார். வியாக்ரபாதர், சிவனருளால் புலிக்கால் பெற்ற முனிவராவார். இவர் பூஜித்ததால் சிவனுக்கு “திருப்புலீஸ்வரர்” என்றும், சிதம்பரத்திற்கு “திருப்புலீஸ்வரம்” என்றும் பெயர் ஏற்பட்டது.
அனந்தீஸ்வரர் திருக்கோயில், சிதம்பரம்
அருள்மிகு அனந்தீஸ்வரர் திருக்கோயில், சிதம்பரம், கடலூர் மாவட்டம்.
+91 98653 44297
காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | அனந்தீஸ்வரர் | |
உற்சவர் | – | சோமாஸ்கந்தர் | |
அம்மன் | – | சவுந்தரநாயகி | |
தீர்த்தம் | – | பதஞ்சலி தீர்த்தம் | |
ஆகமம் | – | சிவாகமம் | |
பழமை | – | 1000வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | தில்லைவனம் | |
ஊர் | – | சிதம்பரம் | |
மாவட்டம் | – | கடலூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த திருமாலைத் தாங்கிக் கொண்டிருப்பவர் ஆதிசேடன். ஒருசமயம் வழக்கத்தைவிட, சுவாமியின் எடை அதிகமாகத் தெரியவே, ஆதிசேடன் காரணம் கேட்டார். அவர், சிவனின் நாட்டியத்தை மனதில் நினைத்ததால் உண்டான ஆனந்தத்தில் எடை அதிகம் தெரிந்ததாகக் கூறினார். ஆதிசேடன், தனக்கு அந்த தரிசனம் கிடைக்க அருளும்படி வேண்டினார். அவர் பூலோகத்தில் சிதம்பரம் சென்று, வியாக்ரபாதருடன் சேர்ந்து சிவனை வழிபட அந்த தரிசனம் கிடைக்குமென்றார். அதன்படி, ஆதிசேடன் பூலோகத்தில் அத்திரி முனிவர், அனுசுயா தம்பதியரின் மகனாக அவதரித்தார். பதஞ்சலி எனப் பெயர் பெற்றார். தில்லை வனம் எனப்பட்ட இப்பகுதியில் தங்கியவர், தீர்த்தம் உண்டாக்கி, அதன் கரையில் ஒரு சிவலிங்கத்தை பிரதிட்டை செய்து பூசித்தார். இவருக்கு பதஞ்சலியின் பெயரால், “அனந்தீஸ்வரர்” என்ற பெயர் ஏற்பட்டது. பதஞ்சலிக்கு அனந்தன் என்றும் பெயருண்டு. பின், நடராஜரின் தரிசனம் கிடைக்கப்பெற்றார்.