Category Archives: கடலூர்

பாசுபதேஸ்வரர் திருக்கோயில், திருவேட்களம், சிதம்பரம் நகர்

அருள்மிகு பாசுபதேஸ்வரர் திருக்கோயில், திருவேட்களம், சிதம்பரம் நகர், கடலூர் மாவட்டம்.

+91- 98420 08291, +91-98433 88552

காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பாசுபதேஸ்வரர்
அம்மன் சத்குணாம்பாள், நல்லநாயகி
தல விருட்சம் மூங்கில்
தீர்த்தம் கிருபா தீர்த்தம்
ஆகமம் காமிய ஆகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவேட்களம்
ஊர் திருவேட்களம் (சிதம்பரம் நகர்)
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்

பாரதப்போரில் வெற்றிபெறுவதற்காக அர்ஜுனன் பாசுபதம் பெற விரும்புகிறான். அப்போது கிருஷ்ணன்,”நீ அனைத்து அஸ்திரங்களையும் உனது மானசீகத் தந்தையான இந்திரனிடமிருந்து பெற்றாய். ஆனால் பாசுபதாஸ்திரத்தை மட்டும் நீ சிவனிடமிருந்துதான் பெற வேண்டும். அதற்கு இந்திரனின் அனுமதி பெற வேண்டும்என்றார்.

இதற்காக அர்ஜுனன் மூங்கில் காடாக இருந்த இத்தலத்தில் தவம் செய்தான். அர்ஜுனனின் தவத்தை கலைக்க, துரியோதனன் மூகாசுரனை பன்றி வடிவில் அனுப்பினான். உடனே சிவன் பார்வதியுடன் வேடன் உருவில் வந்து பன்றியை கொன்றார். நான்கு வேதங்களும் நாய்களாக மாறி இறைவன் பின்னே வந்தன. அதே பன்றியின் மீது அர்ஜுனனும் அம்பு எய்தான். பன்றியை யார் கொன்றார்கள் என்பது குறித்து சிவனுக்கும், அர்ஜுனனுக்கும் சொற்போரும் விற்போரும் நடந்தது. போரில் அர்ஜுனனின் வில் முறிந்தது. கோபமடைந்த அர்ஜுனன் முறிந்த வில்லால் வேடனை அடித்தான். அந்த அடி மூவுலகில் உள்ள அனைத்து உயிர்களின் மீதும் விழுந்தது. வேடுவப்பெண்ணாக வந்த பார்வதி கோபமடைந்தாள். சிவன் பார்வதியிடம்,”உமையவளே. நீ லோகமாதா. நீ கோபப்பட்டால் இவ்வுலகம் தாங்காதுஎன சமாதானப்படுத்தி சற்குணா” (நல்லநாயகி) தள்ளி நில் என்கிறார். சிவன் தன் திருவடியால் அர்ஜுனனை தூக்கி எறிகிறார். சிவனின் பாத தீட்சை பெற்று அன்னையின் கருணையால் இத்தல கிருபாகடாட்ச தீர்த்தத்தில் விழுகிறான். சிவன் பார்வதியுடன் காட்சி கொடுத்து பாசுபதாஸ்திரத்தை தந்தருளினார். அர்ஜுனன் வில்லால் அடித்த தடத்தை இன்றும் இலிங்கத்தின் மீது காணலாம்.

பொன்னம்பலநாதர் என்ற சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், நல்லாத்தூர்

அருள்மிகு பொன்னம்பலநாதர் என்ற சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், நல்லாத்தூர், கடலூர் மாவட்டம்.

+91- 413 – 269 9422, 94427 86351

காலை 7 மணி முதல் 11.30 மணி வரை மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பொன்னம்பலநாதர் என்ற சொர்ணபுரீஸ்வரர்
அம்மன் திரிபுர சுந்தரி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் நல்லாத்தூர்
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு

திருநாவுக்கரசர் பாடிய வைப்புத்தலம்.

பழமையான கோயில் என்பதால் இத்தலத்தின் வரலாறை தெளிவாகச் சொல்ல முடியவில்லை. ஆனால், கோயிலின் அமைப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. பலகணி வழியாகப் பார்க்கின்ற சிவலிங்கங்கள், அக்னியின் சொரூபம் என்று சொல்லப்படுகிறது. இவரை நேரடியாக தரிசிப்பதற்கான உடல் வலிமை பக்தனுக்கு இருக்காது. எனவே பலகணி வழியாக வழிபாடு செய்தால், அவரவர் உடல் நிலைக்கு தகுந்தாற் போல் தீக்கதிர்கள் இறைவனிடமிருந்து வெளிப்பட்டு உடல் பலமும் மனபலமும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.