Category Archives: திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம் – ஆலயங்கள்
திருவள்ளூர் மாவட்டம் – ஆலயங்கள் |
|
அருள்மிகு |
ஊர் |
பாலசுப்பிரமணியசுவாமி | ஆண்டார்குப்பம் |
திரிபுராந்தகர் | கூவம் (திருவிற்கோலம்)
|
சுந்தரராஜப்பெருமாள் | கோயில்பதாகை |
பாலசுப்ரமணியன் | சிறுவாபுரி |
கல்யாண வீரபத்திரர் | சென்னிவாக்கம் |
புஷ்பரதேஸ்வரர் | ஞாயிறு |
தண்டையார்பேட்டை, சென்னை |
|
சிவாநந்தீஸ்வரர் | திருக்கண்டலம் |
வேதகிரீசுவரர் (பக்தவத்சலேசுவரர்) | திருக்கழுக்குன்றம் |
சுப்பிரமணியசுவாமி | திருத்தணி |
இருதயாலீசுவரர்
|
திருநின்றவூர்
|
பக்தவத்சலப்பெருமாள் | திருநின்றவூர் |
வாசீஸ்வரர் | திருப்பாசூர் |
ஒத்தாண்டேஸ்வரர் | திருமழிசை |
ஜெகந்நாதப்பெருமாள் | திருமழிசை |
வீரராகவர் | திருவள்ளூர் |
வடாரண்யேஸ்வரர் | திருவாலங்காடு |
அகிலவல்லி உடனுறை ஆதிவராகப் பெருமாள் | திருவிடந்தை, மகாபலிபுரம் |
திருவேற்காடு, சென்னை |
|
படம்பக்கநாதர் | திருவொற்றியூர் |
பட்டினத்தார் |
திருவொற்றியூர் |
காரிய சித்தி கணபதி | நத்தம், பஞ்செட்டி |
நாகமல்லீஸ்வரர் | நாலூர், மீஞ்சூர் |
விண்ணவராய பெருமாள் | பழைய அம்பத்தூர் |
ஊன்றீஸ்வரர் | பூண்டி |
பெசன்ட் நகர்–சென்னை |
|
ஐமுக்தீஸ்வரர் | பெரியபாளையம் |
ஸ்தலசயனப் பெருமாள் | மகாபலிபுரம் |
சிங்கீஸ்வரர் | மப்பேடு |
மயிலாப்பூர், சென்னை |
|
கல்யாணசுந்தர வீரபத்திரர் | மாநெல்லூர் |
சுவாமிநாத பாலமுருகன் | மேட்டுக்குப்பம், வானகரம் |
அங்காள பரமேஸ்வரி | ராமாபுரம் (புட்லூர்) |
பிரசன்ன இராகவப்பெருமாள் | ராயபுரம், சென்னை |
மாசிலாமணீஸ்வரர் | வடதிருமுல்லைவாயில் |
அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில், மப்பேடு
அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில், மப்பேடு, பேரம்பாக்கம் வழி, திருவள்ளூர் மாவட்டம்.
+91 44 -2760 8065, 94447 70579, 94432 25093
(மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
சிங்கீஸ்வரர் |
தாயார் |
– |
|
புஷ்பகுஜாம்பாள் |
பழமை |
– |
|
1000 வருடங்களுக்கு முன் |
ஊர் |
– |
|
மப்பேடு |
மாவட்டம் |
– |
|
திருவள்ளூர் |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
சிவபெருமான், பஞ்சசபைகளில் ஒன்றான திருவாலங்காட்டில் ஆனந்தத் தாண்டவம் ஆடியபோது, சிங்கி என்ற நந்திதேவர் மிருதங்கம் வாசித்தார். அவ்வாறு இசைக்கும் போது, தொழில் பக்தியில் ஆழ்ந்து கண்ணை மூடி விட்டார். இதனால், சிவனின் நடனத்தைக் காண முடியாமல் போய்விட்டது. இசை ரசனையில் சிவநடனத்தைக் காண முடியாமல் போனதால், அந்த ஆனந்த நர்த்தனத்தைக் காண வேண்டும் என்று சிவனிடம் விண்ணப்பித்தார். அவரது தொழில் பக்தியை பாராட்டிய சிவன், பூலோகத்திலுள்ள மெய்ப்பேடு என்னும் தலத்திற்கு வருமாறு சொன்னார். நந்திதேவரும் இங்கு சென்று அங்கிருந்த இலிங்கத்திற்குப் பூஜை செய்தார். அப்போது சிவபெருமான் அவர் முன் தோன்றி, மீண்டும் நடனம் புரிந்தார். சிங்கி என்னும் நந்தி வணங்கிய தலம் என்பதால், இறைவனுக்கு சிங்கீஸ்வரர் என பெயர் ஏற்பட்டது. அம்பாள் நறுமணம் மிக்க மலருக்கு உரியவளாக இருப்பதால் புஷ்பகுஜாம்பாள் என்றும், பூமுலைநாயகி என்றும் அழைக்கப்படுகிறாள்.