Category Archives: திருவள்ளூர்
அருள்மிகு சுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில், கோயில்பதாகை
அருள்மிகு சுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில், கோயில்பதாகை, அம்பத்தூர், சென்னை, திருவள்ளூர் மாவட்டம்.
+91 99414 39788 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 8 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
சுந்தரராஜப்பெருமாள் |
உற்சவர் |
– |
|
சுந்தரராஜப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி |
தாயார் |
– |
|
சுந்தரவல்லி |
ஆகமம் |
– |
|
வைகானசம் |
தீர்த்தம் |
– |
|
சேதா புஷ்கரணி |
பழமை |
– |
|
500 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் |
– |
|
சேதாரண்ய க்ஷேத்திரம் |
ஊர் |
– |
|
கோயில் பதாகை |
மாவட்டம் |
– |
|
திருவள்ளூர் |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
பெருமாள், தவம் செய்த பிருகு, மார்கண்டயே மகரிஷிகளுக்கு திருப்புல்லாணி (ராமநாதபுரம் மாவட்டம்), பூரி, திருமழிசை ஆகிய இடங்களில் காட்சி தந்தார். இவையெல்லாம் போதாதென்று அவர்கள் சேதாரண்ய க்ஷேத்திரம் ( தூய்மையான இடம்) என்ற இடத்தில் பூரண சேவை கிடைக்க வேண்டும் என்று 12 ஆண்டு காலம் தவம் செய்தனர். அதன்படி அழகான தோற்றத்தில் பெருமாள் பூரண சேவையளித்தார். அவர் அழகாக இருந்ததால், சுந்தரராஜபெருமாள் எனப்பட்டார். அந்த சேதாரண்ய க்ஷேத்திரம் தற்போது கோயில் பதாகை எனப்படுகிறது. பதாகை என்றால் வழி. இந்த ஊர் வழியாக மாசிலாமணீஸ்வரர் கோயிலுக்கு சோழமன்னன் ஒருவன் சென்று வருவானாம். அதனால் இவ்வூர் கோயில் பதாகை என்று பெயர் பெற்று விட்டது. 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில் இது.
பெரும்பாலான பெருமாள் கோயில்களில் கருடாழ்வார் பெருமாள் எதிரே நின்ற நிலையில்தான் காட்சி தருவார். பெருமாளை வாகனங்களில் சுமந்து வரும் போது ஒரு காலை மண்டியிட்டு, ஒரு காலை சற்று உயர்த்தியிருப்பார். ஆனால், இந்தக் கோயிலில் கருடாழ்வார் தவம் செய்வது போல் அமர்ந்த நிலையில் பெருமாள் எதிரே உள்ளார். மாங்காடு காமாட்சியம்மன் ஊசி முனையில் தவம் செய்த போது, உலகம் பஸ்பமாகிவிடும் என்ற நிலை ஏற்பட்டது. அவளது உக்ரத்தைத் தணிக்கும் வகையில், ஆதிவைகுண்டவாசப்பெருமாள் சங்கு சக்கரத்தை பிரயோகம் செய்யும் வகையில் அருள்பாலிக்கிறார். அருகில் ஸ்ரீதேவி, பூதேவி, மார்க்கண்டேய மகரிஷி ஆகியோர் வீற்றிருக்கின்றனர். பெருமாளின் சக்கர வீச்சு தன்னையும் பதம்பார்த்து விடும் என்று அஞ்சியோ, அதற்கு குந்தகம் விளைவிக்காத வகையிலோ கருடாழ்வார் அமர்ந்து விட்டார் போலும்! இது தவிர நின்ற நிலையிலும் ஒரு கருடாழ்வார் கருவறையின் பின்பக்கம் உள்ளார். இந்தச் சிலை மிகப் பழமையானது. கருடனின் முகம் சற்று வித்தியாசமாக உள்ளது. இதுபோன்ற அபூர்வச் சிலைகளைப் பாதுகாப்பது அரசு மற்றும் பக்தர்களின் கடமை. இங்குள்ள தாயார் சுந்தரவல்லி எனப்படுகிறார்.
அருள்மிகு கல்யாண வீரபத்திரர் திருக்கோயில், சென்னிவாக்கம்
அருள்மிகு கல்யாண வீரபத்திரர் திருக்கோயில், சென்னிவாக்கம், ஜெகநாதபுரம் போஸ்ட், பொன்னேரி தாலுகா, திருவள்ளூர் மாவட்டம்.
+91- 44 – 2558 6903, 90032 64268, 94447 32174
(மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 7.30 – 10 மணி, மாலை 6 – இரவு 8 மணி. மதிய வேளையில் கோயில் அருகிலுள்ள அர்ச்சகரை அழைத்துக்கொண்டு, சுவாமியை தரிக்கலாம். இத்தலத்திற்கு செல்பவர்கள் முன்னரே போனில் தொடர்பு கொண்டுவிட்டுச் செல்வது நல்லது.
மூலவர் | – | கல்யாணவீரபத்திரர் | |
அம்மன் | – | மரகத பத்ராம்பிகை | |
தல விருட்சம் | – | வில்வம் | |
ஆகமம் | – | சிவாகமம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | சென்னிவாக்கம் | |
மாவட்டம் | – | திருவள்ளூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
முற்காலத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த சில வியாபாரிகள், நவரத்தினக்கல் வியாபாரம் செய்வதற்காக தென்திசை நோக்கி வந்தனர். அவர்களில் வயதான மூதாட்டி ஒருத்தியும் வந்தாள். அம்பாள் பக்தையான அவள், தன்னுடன் ஒரு அம்பாள் சிலையையும் எடுத்து வந்தாள். தான் தங்குமிடங்களில் அம்பாளை வழிபட்டு, மீண்டும் பயணத்தை தொடரும்போது சிலையை எடுத்துச் செல்வது அவளது வழக்கம். வியாபாரிகள் ஒருநாள் இத்தலத்தில் தங்கினர். வழக்கம் போல் அம்பாளுக்கு பூஜை செய்து வணங்கிய மூதாட்டி, சிலையை எடுக்க முயன்றாள். ஆனால் முடியவில்லை. உடன் இருந்த வியாபாரிகளும் சிலையை எடுக்க முயன்று, முடியாமல் விட்டுவிட்டனர். காரணம் தெரியாத வியாபாரிகள், மறுநாள் கிளம்ப நினைத்து அன்றும் இத்தலத்திலேயே தங்கினர். அன்றிரவில் மூதாட்டியின் கனவில் தோன்றிய அம்பிகை, தான் இருக்கும் இடத்திற்கு அருகில் ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி, அங்கு வீரபத்திரர் இருப்பதாக உணர்த்தினாள். மூதாட்டி இதை வணிகர்களிடம் கூறினாள். அவர்கள் அவ்விடத்தில் தோண்டியபோது, வீரபத்திரர் சிலை இருந்ததைக் கண்டனர். பின்னர் அங்கேயே அவரைப் பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினர். அம்பாள் குறிப்பால் உணர்த்தி கிடைக்கப்பெற்ற மூர்த்தி என்பதால் இவர், “கல்யாண வீரபத்திரர்” என்று பெயர் பெற்றார். இத்தலத்து வீரபத்திரர் மண்ணிலிருந்து தாமாக கிடைத்தவர் என்பதால், “தான்தோன்றி வீரபத்திரர்” என்றும், “மண்ணில் கிடைத்த தங்கம்” என்றும் பக்தர்கள் அழைக்கிறார்கள்.