Category Archives: திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் – ஆலயங்கள்

திருவண்ணாமலை மாவட்டம் ஆலயங்கள்

அருள்மிகு

ஊர்

அனவரத தாண்டவேஸ்வரர் அரடாப்பட்டு
திரு மணிச்சேறை உடையார் இஞ்சிமேடு, பெரணமநல்லூர்
எந்திர சனீஸ்வரர் ஏரிக்குப்பம்

வீரஆஞ்சநேயர்

களம்பூர்

முத்துமாரியம்மன்

கீழ்கொடுங்கலூர், வந்தவாசி

வாலீஸ்வரர் குரங்கணில்முட்டம்

கங்கையம்மன்

சந்தவாசல்

சுப்பிரமணியர் செங்கம்
வேணுகோபால பார்த்தசாரதி செங்கம்
வேதபுரீஸ்வரர் செய்யாறு
தாளபுரீஸ்வரர், கிருபாபுரீஸ்வரர் திருப்பனங்காடு
திருமால்பாடி டிரான்ஸ்ஃபர் பெருமாள் திருமால்பாடி
அருணாச்சலேஸ்வரர் திருவண்ணாமலை
ஆதி அருணாசலேஸ்வரர்
திருவண்ணாமலை
பூதநாராயணப்பெருமாள் திருவண்ணாமலை

ராம்சுரத்குமார்

திருவண்ணாமலை

ரகுமாயீ சமேத பாண்டுரங்கன் தென்னாங்கூர்
கனககிரீசுவரர் தேவிகாபுரம்
சுந்தரவரதராஜப்பெருமாள் நல்லூர்
பிரசன்னவெங்கடேச பெருமாள் நல்லூர்
கைலாசநாதர் நார்த்தம்பூண்டி
தீர்க்காஜலேஸ்வரர் நெடுங்குணம்
இராமச்சந்திரப் பெருமாள் நெடுங்குன்றம்
யோகராமச்சந்திர மூர்த்தி படவேடு

ரேணுகாம்பாள்

படவேடு

மல்லிகார்ஜுனசுவாமி பர்வதமலை, கடலாடி
புத்திரகாமேட்டீஸ்வரர் புதுக்காமூர், ஆரணி
திருக்கரையீஸ்வரர் பெரணமல்லூர்

வரதஆஞ்சநேயர்

பெரணமல்லூர்

உத்தமராயப்பெருமாள் பெரிய அய்யம்பாளையம்
திருக்காமீஸ்வரர் பொன்னூர்

பச்சையம்மன்

வாழைப்பந்தல்

அருள்மிகு பூதநாராயணப்பெருமாள் திருக்கோயில், திருவண்ணாமலை

அருள்மிகு பூதநாராயணப்பெருமாள் திருக்கோயில், வடக்குமாட வீதி, திருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம்.

+91 96778 56602 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 5 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

பூதநாராயணப்பெருமாள்

உற்சவர்

தாயார்களுடன் நாராயணர்

ஆகமம்

வைகானசம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

வடக்குமாட வீதி, திருவண்ணாமலை

மாவட்டம்

திருவண்ணாமலை

மாநிலம்

தமிழ்நாடு

கிருஷ்ண பரமாத்வால் தனக்கு அழிவு உண்டாகும் என்பதை அறிந்த கம்சன், அவரை அழிக்கப் பல யுக்திகளைக் மேற்கொண்டான். ஆனால், அவனால் கிருஷ்ணரை நெருங்கக்கூட முடியவில்லை. ஒருகட்டத்தில் பூதனை என்ற அரக்கியை தந்திரமாக அனுப்பி வைத்தான். அவள் ஒரு அழகியாக உருவெடுத்து, கிருஷ்ணரிடம் சென்றாள். அவரைத் தூக்கிக் கொண்டு கொஞ்சினாள். வந்திருப்பது அரக்கி என்று தெரிந்தும், ஒன்றும் தெரியாதவர் போல கிருஷ்ணர் நடித்தார். பூதனை அவரை தன் மடியில் வைத்துக் கொண்டு, பாசமுடன் தாய் போல நடித்து பால் கொடுத்தாள். கிருஷ்ணரும் பால் அருந்துவது போல நடித்து, அவளை வதம் செய்தார். இதனால், கிருஷ்ணருக்கு பூதநாராயணர் என்ற பெயர் ஏற்பட்டது. இந்த வடிவத்தில் சுவாமிக்கு இங்கு ஒரு மன்னர் கோயில் எழுப்பினார். பிற்காலத்தில் வழிபாடு மறைந்து, கோயிலும் மறைந்து போனது.
பல்லாண்டுகளுக்கு பின், இப்பகுதியில் வசித்த பெருமாள் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய சுவாமி, தான் மண்ணிற்கு அடியில் புதைந்திருப்பதை உணர்த்தினார். அதன்படி, இங்கு சுவாமி சிலையைக் கண்ட பக்தர், அவர் இருந்த இடத்தில் கோயில் எழுப்பினார்.

மகாவிஷ்ணு பூதநாராயணர் என்ற பெயரில் தேனி அருகிலுள்ள சுருளிமலையிலும், இங்கும் அருள்பாலிக்கிறார். இங்கு சுவாமி, கிருஷ்ணராக பால பருவத்தில் இருந்தாலும், பூதனையிடம் பால் அருந்தியதால் பூதாகரமாக பெரிய உருவத்துடன் காட்சியளிக்கிறார். இடது காலை மடித்து, வலது காலை குத்திட்டு அமர்ந்திருக்கிறார். வலது கையில் சங்கு மட்டும் உள்ளது. இடது கையை பக்தர்களுக்கு அருள் தரும் அபய முத்திரையாக வைத்துள்ளார். தினமும் காலையில் இவருக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. குணமுள்ள குழந்தை பிறக்க, பிறந்த குழந்தைகள் அறிவுப்பூர்வமாக இருக்க இவருக்கு வெண்ணெய், கல்கண்டு படைத்து, துளசி மாலை அணிவித்து வழிபடுகிறார்கள்.