Category Archives: சிவ ஆலயங்கள்

நாகநாதர் திருக்கோயில், பேரையூர்

அருள்மிகு நாகநாதர் திருக்கோயில், பேரையூர், புதுக்கோட்டை மாவட்டம்.

+91- 4322 – 221084, 9486185259

காலை 6 மணி முதல் 11 மணி வரை,மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நாகநாதர்
அம்மன் பிரகதாம்பாள்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் செண்பகவனம், கிரிஷேத்திரம்
ஊர் பேரையூர்
மாவட்டம் புதுக்கோட்டை
மாநிலம் தமிழ்நாடு

நாகராஜன் வணங்கிய தலம். எனவே இறைவன் நாகநாதர் எனப்படுகிறார். நாகநாதருக்கு பால் அபிஷேகம் செய்வார்கள். பால் அவரது உடலில் பட்டவுடன் நீல நிறமாக மாறும் அதிசயத்தைக் காணலாம். இத்திருத்தலத்தின் பெருமை கிருதாயுகத்திலே நான்முகனாகிய பிரம்மன் புண்ணிய நதிகளைக் கோயில் திருக்குளத்தில் சேர்த்து நீராடி, பிறை சூடிய பெருமானைத் தரிசித்து துதித்த தலம்.

சர்ப்பத்தினால் தான் இழந்த ஒளியை மீண்டும் பெறுவதற்கு சூரியபகவான் இங்கு வழிபட்டார். இந்திரன் சாபவிமோசனம் பெற்ற அருள்தலம். வருணனின் மகன் தவமியற்றி கலி நீங்கிய தலம். பஞ்சமாபாதகம் செய்த ஒருவன் இறைவனின் பூஜைக்குச் சாம்பிராணி தந்ததால் அவனது எமவாதை குறைந்தது.

நாகநாதசுவாமி திருக்கோயில், கீழ்ப்பெரும்பள்ளம்

அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில், (கேது தலம்), கீழ்ப்பெரும்பள்ளம், நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 4364 – 260 051, 260 582, 260 088, 94435 64642

மூலவர் நாகநாதர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் சவுந்தர்யநாயகி
தல விருட்சம் மூங்கில்
தீர்த்தம் நாகதீர்த்தம்
ஆகமம் காமிகம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் கீழப்பெரும்பள்ளம்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

தேவர்களும், அசுரர்களும் அமுதம் பெற, பாற்கடலை கடைந்தபோது வாசுகி என்ற நாகத்தைக் கயிறாகப் பயன்படுத்தினர். தொடர்ந்து பாற்கடலை கடைந்ததால் வாசுகி பலவீனமடைந்தது. ஒருகட்டத்தில் களைப்பால் விஷத்தை உமிழ்ந்தது. பயந்து போன தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். அவர் விஷத்தை விழுங்கி, தேவர்களைக் காப்பாற்றினார். தனது விஷத்தை, சிவன் விழுங்க வேண்டிய நிலை ஏற்பட்டதற்காக வாசுகி வருந்தியது. சிவஅபச்சாரம் செய்ததற்கு பிராயச்சித்தமாக தவமிருந்தது.

வாசுகிக்கு காட்சி தந்த சிவன், பாவ விமோசனம் கொடுத்ததோடு, அதன் தியாக உணர்வைப் பாராட்டினார். அப்போது வாசுகி, தனக்கு அருள் செய்த கோலத்தில், தனக்கு காட்சி கொடுத்த இடத்தில் எழுந்தருள வேண்டும் என்று வேண்டியது. அதன் வேண்டுதலை ஏற்ற சிவன், நாகத்தின் பெயரைத் தாங்கி, “நாகநாதர்என்ற பெயருடன் இத்தலத்தில் அமர்ந்தார்.

இக்கோயிலில் கேது பகவானுக்கு இராகுகாலம் மற்றும் எமகண்டத்தில் விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜை நடக்கிறது.