Category Archives: சிவ ஆலயங்கள்
நாகேஸ்வர சுவாமி திருக்கோயில், வடநாகேஸ்வரம், குன்றத்தூர்
அருள்மிகு நாகேஸ்வர சுவாமி திருக்கோயில், வடநாகேஸ்வரம், குன்றத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம்.
+91- 44 – 2478 0436, 93828 89430.
காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | நாகேஸ்வரர் | |
உற்சவர் | – | சோமாஸ்கந்தர் | |
அம்மன் | – | காமாட்சி | |
தல விருட்சம் | – | செண்பக மரம் | |
தீர்த்தம் | – | சூரிய புஷ்கரணி | |
ஆகமம்/பூஜை | – | காரணாகமம் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | வட(திரு)நாகேஸ்வரம் | |
மாவட்டம் | – | காஞ்சிபுரம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சோழமன்னன் அனபாயன் இப்பகுதியை ஆண்டபோது, இவ்வூரில் வசித்த சிவபக்தர் ஒருவர் அவனது அரசவையில் அமைச்சராகப் பணியாற்றினார். அவரது மகன் அருண்மொழிராமதேவர், குலத்தின் பெயரால் “சேக்கிழார்” என்றழைக்கப்பட்டார். சிறுவயதிலேயே புலமையுடன் இருந்த சேக்கிழாரை, மன்னன் தனது அமைச்சராக்கிக் கொண்டான். அவரது சிறப்பான பணிகளைக் கண்டு மகிழ்ந்தவன், “உத்தமசோழபல்லவர்” என்றும் சிறப்பு பெயரிட்டு அழைத்தான். சிவபக்தரான சேக்கிழார், சிவனருள் பெற்ற அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறை, “பெரியபுராணம்” என்னும் தொகுப்பாக வெளியிட்டார்.
ஒருசமயம் சேக்கிழார், கும்பகோணம் அருகிலுள்ள இராகு தலமான திருநாகேஸ்வரம் நாகேஸ்வரர் கோயிலுக்குச் சென்று சிவனைத் தரிசித்தார். அத்தலத்து சிவன் மீது அதீத பக்தி கொண்ட அவர், தினமும் நாகேஸ்வரரின் தரிசனம் கிடைக்க வேண்டுமென விரும்பினார்.
நாகேஸ்வர சுவாமி திருக்கோயில், பூவரசன் குப்பம்
அருள்மிகு நாகேஸ்வர சுவாமி திருக்கோயில், பூவரசன் குப்பம், விழுப்புரம் .
+91 -94420 – 10834, 94867 – 48013
காலை 8 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | நாகேஸ்வரர் | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | பூவரசன் குப்பம் | |
மாவட்டம் | – | விழுப்புரம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
பல்லவ மன்னனாகிய சிம்மவர்மன் பல இடங்களில் சைவ, வைணவக் கோயில்களை கட்டி வந்த போது காடுகளையும், மலைகளையும் சீர் செய்ய வேண்டி வந்தது. அப்படி செய்து கோயில்கள் கட்டும் போது அங்கிருந்த புற்றுக்களையும், நாகங்களையும் அழிக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. இதனால் அவனுக்கும் அவனது வம்சத்தினருக்கும் நாகதோஷம் ஏற்பட்டு அவதியுற்றான். அப்போது தென்பெண்ணை நதிக்கரையில் தவம் செய்து கொண்டிருந்த சிவஹரி என்ற முனிவரை சந்தித்து தனது நிலையைக் கூறினான். இதற்கு பரிகாரம் கேட்க,”இந்த ஆற்றங்கரையின் ஓரத்திலுள்ள ஒரு புற்றினுள், சுயம்புவாக ஒரு சிவலிங்கம் உள்ளது. அதனை ஒரு நாகம் பூஜித்து வருகிறது.