Category Archives: சிவ ஆலயங்கள்
காயத்ரி லிங்கேஸ்வரர் திருக்கோயில், பவானி
அருள்மிகு காயத்ரி லிங்கேஸ்வரர் திருக்கோயில், பவானி, ஈரோடு மாவட்டம்.
+91-4256-230 192, 98432 48588
காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | காயத்ரி லிங்கேஸ்வரர் | |
தல விருட்சம் | – | இலந்தை | |
ஊர் | – | பவானி | |
மாவட்டம் | – | ஈரோடு | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
இத்தலத்தின் தல விருட்சமான இலந்தை மரத்தின் அடியில்தான் பராசர முனிவர் தனது ஆசிரமத்தை நிறுவி, தினமும் இறைவனை வணங்கி வந்ததாக சொல்லப்படுகிறது. அவர் சங்மேஸ்வரரை வணங்குவதற்கு முன், சற்று தூரத்திலுள்ள காவிரியாற்று ஓரம் சென்று தினமும் நித்யகர்ம அனுஷ்டானத்தை தொடர்ந்து செய்து வந்தாராம். அதுபோல் அவர் தொடர்ந்து அந்த இடத்தில் காயத்ரி மந்திரத்தை தொடர்ந்து 12 ஆயிரம் கோடி முறை உச்சரித்த காரணத்தால், “காயத்ரி லிங்கேஸ்வரர்” அங்கே தானாகவே தோன்றினார்.
எயிலிநாதர் திருக்கோயில், நன்செய் இடையாறு, பரமத்திவேலூர்
அருள்மிகு எயிலிநாதர் திருக்கோயில், நன்செய் இடையாறு, பரமத்திவேலூர், நாமக்கல் மாவட்டம்.
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | எயிலிநாதர் (திருவேலிநாதர்) | |
அம்மன் | – | சுந்தரவல்லி | |
தல விருட்சம் | – | வன்னிமரம் | |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | நன்செய் இடையாறு, பரமத்திவேலூர் | |
மாவட்டம் | – | நாமக்கல் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
பஞ்ச பாண்டவர்களில் பலசாலியான பீமனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம் நன்செய் இடையாறில் உள்ளது. பீமன் மிகவும் பலம் மிக்கவன் என கருதிக்கொண்டிருந்தான். தன்னைவிட இந்த உலகில் வலியவர் யாருமில்லை என ஆணவம் மிகுந்து சொல்லித் திரிந்தான். அவன் நல்லவன் ஆயினும் இந்த ஆணவம் அவனது புகழை குறைத்தது. அவனுக்கு புத்தி புகட்ட திருமால் செய்த ஏற்பாட்டின்படி சிவபெருமான் மனித உடலும், மிருக தலையும் கொண்ட மிருகம் ஒன்றை ஏவினார். அந்த மிருகத்தின் சக்தியின் முன் பீமனால் நிற்க முடியவில்லை. தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, “கோவிந்தா, கோபாலா” என கதறிக்கொண்டே ஓடினான்.