Category Archives: திருமால் ஆலயங்கள்
அருள்மிகு வைகுண்டநாதர் திருக்கோயில், ஸ்ரீ வைகுண்டம்
அருள்மிகு வைகுண்டநாதர் திருக்கோயில், ஸ்ரீ வைகுண்டம் – 628601 தூத்துக்குடி மாவட்டம்.
+91 4630 256 476 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியாகிய அருள்மிகு கள்ளபிரான் சுவாமி திருக்கோயில், ஸ்ரீவைகுண்டம்
மூலவர் | – | கள்ளபிரான் (ஸ்ரீ வைகுண்டநாதர்) |
கிரகம் | – | சூரிய ஸ்தலம் |
தாயார் | – | வைகுந்த நாயகி (கள்ளர்பிரான் நாச்சியார் , சோரநாத நாயகி) |
தீர்த்தம் | – | தாமிரபரணி தீர்த்தம், பிருகு தீர்த்தம், கலச தீர்த்தம் |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
ஊர் | – | ஸ்ரீ வைகுண்டம் |
மாவட்டம் | – | தூத்துக்குடி |
மாநிலம் | – | தமிழ்நாடு |
கோமுகன் என்னும் அசுரன், பிரம்மாவிடமிருந்து வேத சாஸ்திரங்களைத் திருடிச்சென்றான். இதனால் படைப்புத்தொழில் நின்று போனது. வருந்திய பிரம்மா, மகாவிஷ்ணுவை வேண்டி, பூலோகத்தில் தாமிரபரணி நதிக்கரையில் தவமிருந்தார். அவருக்குக் காட்சி தந்த சுவாமி, அசுரனை அழித்து வேதங்களை மீட்டுத் தந்தார். பிரம்மாவின் வேண்டுதலுக்காக இங்கே எழுந்தருளி, “வைகுண்டநாதர்” என்ற திருநாமம் பெற்றார்.
அருள்மிகு பூமிபாலகர் திருக்கோயில், திருப்புளியங்குடி
அருள்மிகு பூமிபாலகர் திருக்கோயில், திருப்புளியங்குடி – 628 621, தூத்துக்குடி மாவட்டம்.
காலை 9 மணி முதல் 12 மணி வரை, மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பூமிபாலகர் |
உற்சவர் | – | காய்சினவேந்தன் |
தாயார் | – | மலர் மகள் நாச்சியார், நில மகள் நாச்சியார், புளியங்குடிவள்ளி |
தீர்த்தம் | – | வருணத்தீர்த்தம், நிருதி தீர்த்தம் |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | திருப்புளிங்குடி |
ஊர் | – | திருப்புளிங்குடி |
மாவட்டம் | – | தூத்துக்குடி |
மாநிலம் | – | தமிழ்நாடு |
இங்கு பெருமாள் நாபியில் இருந்து தாமரைக்கொடி தனியாகக் கிளம்பிச் சென்று சுவற்றில் உள்ள பிரம்மாவின் தாமரை மலருடன் இணைந்து கொள்கிறது. பாத தரிசனம் செய்ய வெளிப்பிரகாரத்தில் இருந்து ஜன்னல் வழியாகத் தரிசனம் செய்ய வேண்டும். இந்திரனுக்கு பிரம்மகத்தி தோஷம் நீங்கிய இடம். வசிஷ்ட புத்திரர்களால் சாபம் அடைந்து ராட்சசனாகத் திரிந்த யக்ஞசர்மா என்ற பிராமணன் பகவானால் சாப விமோசனம் பெற்ற தலம். வருணன், நிருதி, தர்மராஜன், நரர் ஆகியயோருக்கு காட்சி கொடுத்ததலம்.